24 special

அண்ணாமலையை கோர்த்துவிட நடந்த சதி அம்பலம்...! இவ்ளோ நரித்தனமான வேலை நடந்துருக்கா..?

annamalai  eddapadi
annamalai eddapadi

அதிமுக பாஜக கூட்டணி 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் நிகழாது என அதிமுகவின் தலைமையிலிருந்து செய்திகள் வந்த பிறகு பாஜக அதிகாரபூர்வமாக கூட்டணி பற்றி தெரிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது ஆனால் அதற்கு முன்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று தேசிய தலைவர்களை சந்தித்து தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதயாத்திரை குறித்து எடுத்துரைக்க செல்வதாக கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். 


அப்பொழுது கோவை மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்பொழுது ஊழல் பட்டியல் அடுத்து வெளியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்வியை ஒரு பத்திரிகையாளர் கேட்க பொறுத்திருந்து பாருங்கள் அண்ணா என்று பதில் அளித்தால் அதற்கு பிறகு ஒரு பெண் பத்திரிக்கையாளர் மாநிலத் தலைவராக நீங்கள் இல்லை என்றால் தொடர்ந்து பாஜகவின் இருந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா என உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பியதால் அண்ணாமலை உடனே சுதாரித்துக்கொண்டு, 'நீங்கள் இங்கு வாருங்கள் சகோதரி உங்களை இந்த பத்திரிகை உலகம் பார்க்க வேண்டும்! கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கிறது என்று, கேமரா முன் வாருங்கள் மக்கள் அனைவரும் பார்க்கட்டும் யார் இந்த கேள்வியை கேட்கிறார் என!! நீங்க மாநில தலைவரா இல்லனா பாஜகவில் இருப்பீங்களா என்ன இந்த மாதிரி அறிவாளித்தனமான கேள்வி?  மக்கள் பார்க்கவேண்டும், கேள்வி கேட்பதில் ஒரு மரபு அந்த மரபை தாண்டிவிட்டால் அண்ணாமலை அமைதியாக இருக்க மாட்டான் இந்த பதவியில் நான் என்ன பசை போட்டா அமர்ந்திருக்கிறேன்?? 

அந்த பத்திரிக்கைகளை காப்பாற்றுவதற்காக மற்றொரு பத்திரிகையாளர் சில கருத்துக்களை கூற இதை எப்படி நீங்கள் டிஃப்பன் பண்ணுவீர்கள்?? நான் இதற்கு முழு நேர அரசியல் செய்ய வேண்டும் பகுதி நேர அரசியல் தான் செய்கிறேன் முழு நேர அரசியல் செய்வது எதற்கு ஊழல் செய்வதற்காக வா! ஆனால் இன்றும் விவசாயியாக தான் இருக்கிறேன்' என்று பதில் அளித்தார். இதனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சில விவாதத்திற்கு உள்ளானது. பிறகு கேள்வி கேட்ட அந்த பெண்ணிடம் கேள்வி கேட்பதற்கு ஒரு மரபு இருக்கு சகோதரி நீங்கள் அனைவரும் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைக்கிறேன் தப்பை தப்பு என சொல்லுங்க சரியா சரின்னு சொல்லுங்க இதை செய்தீர்கள் என்றால் உங்கள் கருத்தை முதலில் கேட்பது நானாகத்தான் இருப்பேன் என்று அப்பெண்மணிக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார். 

அந்த பத்திரிக்கையாளர் பெயர் லஷ்மி , இந்த நிலையில் அண்ணாமலை டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்திற்குப் பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது அந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் பத்திரிகையாளரான சமீர் அகமது என்பவர் பேசினார் அதுவும் சர்ச்சையானது. இப்படி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொடர்ந்து அண்ணாமலையை கோபப்படுத்த வேண்டும் என இவர்கள் செயல் படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் இது குறித்து தனது எக்ஸ் வளையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இடதுசாரி சிந்தனையுடன் இயங்கும் பத்திரிக்கையாளர் லட்சுமி தொடர்ந்து உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்.ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கன்னத்தை தடவினார் என புகார்! அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பில் குழப்பத்தை ஏற்படுத்துவது சபீர்,லட்சுமி இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான்!அடையாளம் காண்போம்! என்று கூறியுள்ளார் இந்த தகவல் இணையத்தில் தற்போது வைரல் ஆகியுள்ளது.