24 special

தோண்டி எடுத்து கண்டு பிடித்துவிட்டார்கள்... இனி எப்படி திமுக அந்த வார்த்தையை சொல்லும்..!

Annamalai and stallin
Annamalai and stallin

சமூக நீதியை காக்கும் இயக்கம் திமுக, மொழி உரிமைக்கு பெயர் போன இயக்கம் திமுக என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் தமிழக ஊடக விவாதங்களில் பேசி வந்தனர், மேலும் அதன் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான சரவணன் மற்றும் பிரசன்னா விவாதம் ஒன்றில் அதிகம் பேசாத மொழியான சமஸ்கிரதம் மொழிக்கு பாஜக அரசு அதிக நிதியை ஒதுக்குகிறது தமிழ் மொழிக்கு ஒதுக்கவில்லை என விவாதங்களில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.


மேலும் ஒரு சிலர் செத்த மொழியான சமஸ்கிரத்திற்கு ஏன் அதிக பணத்தை ஒதுக்கீடு செய்கிறது பாஜக அரசு, இது முற்றிலும் தவறான செயல் எனவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் தற்போது RTI மூலம் தோண்டி எடுத்து ஆதாரத்தை பிடித்துள்ளது பாஜக, காங்கிரஸ் -திமுக ஆட்சியில் தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை என்ன? சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கப்பட்ட தொகை என்ன என?ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளது.

அதில் 2010-2014 திமுக அங்கம் வகித்த கூட்டணி ஆட்சியில் தமிழ் மொழிக்கு ₹31 கோடியும், சமஸ்கிரத மொழிக்கு ₹534 கோடியும் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்ற தகவலை கண்டறிந்துள்ளனர், இந்த தகவலை பகிர்ந்து, பாஜக  தமிழ் மொழியின் விரோதி என சொல்லும் திமுக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற போது ஏன்? தமிழ் மொழியை காட்டிலும் 15 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்கள் என்ற கேள்வியை பாஜகவினர் எழுப்புகின்றனர்.

மொத்தத்தில் திமுக வைக்கும் குற்றசாட்டுகள் பலவற்றிற்கு பாஜகவினர் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்து வருகின்றனர், இனியும் திமுக மொழி பற்று குறித்து பேசினால் அதற்கு ஆதாரத்துடன் முறையாக பதிலடி கொடுப்போம் எனவும் பாஜகவினர் குறிப்பிட்டு வருவதால் மொத்தத்தில் இனி திமுக  வரும் காலத்தில் சமஸ்கிரதம் குறித்து பேசினால் பொது வெளியில் அம்பலப்படும் என்று எச்சரிக்கை விடுகின்றனர் பாஜகவினர்.மொழி மொழி என பேசுவது எல்லாம் வெறும் கோஷம் தானா?