24 special

அவங்க எல்லாம் வந்தாங்களே நீங்க எங்க எங்க போனீங்க?....மன்சூர் அலிகான் கோபத்துடன் சொன்னது..!

mansoor alikhan, vadivelu
mansoor alikhan, vadivelu

திரைத் துறையில் நடிகர் சூர்யா நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி காதலே நிம்மதி, பெரியண்ணா, பிரண்ட்ஸ் என்ற முதல் ஏழு படங்களில் மிகவும் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நடித்து வந்து சூர்யா பாலாவை இயக்கத்தில் நந்தா என்ற படம்தான் ஒரு முகவரியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து உன்னை நினைத்து மௌனம் பேசியதே என்ற பல படங்களில் நடித்து தற்போது நடிப்பில் இவரை மிஞ்சியவர் இல்லை என்ற வகையிலும் பல விமர்சனங்கள் அப்போது உலா வந்தது. இவை அனைத்தும் சாதாரண பொது மக்களுக்கு அதாவது திரை உலகில் திரைக்குப் பின்னால் இருக்கும் சூர்யாவாக தெரிந்த விஷயங்கள்! ஆனால் இதே சூர்யா மற்றும் அவரது குடும்பம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்வைத்த அரசியல் சார்ந்த கருத்துக்கள் ஏராளமானது! ஆரம்பத்தில் நீட் குறித்த எதிர்ப்பை முன்வைத்த சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சர்ச்சைக்குரிய பாடலை  இடம் பெற வைத்து தமிழக அரசை விமர்சித்திருந்தார்.


அதோடு ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் என்ற பல முக்கிய விவகாரங்களை கொண்ட படத்தில் நடித்தார். இதற்கிடையில் தனது அகரம் நிகழ்ச்சியில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்து விமர்சித்து இருந்தார் அதோடு ஓ டி டி யில் தனது மனைவி ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் என்ற படத்தை வெளியிட்டு திரையரங்கு உரிமையாளர்களிடமும் சர்ச்சையில் ஈடுபட்டார். அதோடு இவரது தந்தை சிவகுமாரும் சில பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் முன் வைத்தார், மேலும் ஜோதிகா விருது வழங்கும் விழாவில் விருதைப் பெற்ற பிறகு ‘சமீபத்தில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றிருந்தேன் தஞ்சை பெரிய கோவில் மிகவும் அழகாக பிரம்மாண்டமாக இருந்தது தூய்மையாக அதனை பராமரித்து வருகிறார்கள் ஆனால் அதே போன்று மருத்துவமனையையும் தூய்மையாக பராமரித்தால் நன்றாக இருக்கும் கோவிலுக்கு செலவிடும் பணத்தை போன்று மருத்துவமனைக்கும் செலவிட்டால் நன்றாக இருக்கும்’ என்ற ஒரு சமூக கருத்தை முன் வைப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பினார். 

இப்படி ஒட்டுமொத்தமாக சூர்யா குடும்பமே கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதிமுகவை எதிர்ப்பது போன்ற கருத்துக்களை முன்வைத்து அரசியல் சர்ச்சைகளில் சிக்கி வந்தனர். ஆனால் 2021 திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு மக்களையும் மக்கள் சார்ந்த பிரச்சனைகளையும் கண்டு கொள்ளாமல் சூர்யா குடும்பம் ஒதுங்கி நிற்கிறது. அதுவும் கடந்த ஆட்சி காலத்தில் நடந்த போராட்டங்களை விட தற்போது திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் ஏராளமானது தினந்தோறும் ஒரு போராட்டம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியையும் காப்பாற்றாமல் மக்களை பெருத்த ஏமாற்றத்தில் தள்ளியது திமுக! இதனால் எங்கே போனார்கள் போராளி சூர்யாவும் சூர்யா குடும்பமும், கடந்த ஆட்சியில் புரட்சி புயலாக இருந்துவிட்டு இந்த ஆட்சியில் கம்மென்று இருக்கிறாரே என பல விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்ட வந்தது. இந்த நிலையில் கிரிக்கெட் அணி ஒன்றை வாங்கி உள்ளார் சூர்யா. அதாவது இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் பத்து கிரிக்கெட் தொடரில் சென்னை அணியில் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் அவரது தம்பி கார்த்தி கூட இதில் முதலீடு செய்து சேர்ந்துள்ளார் என சில தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இது குறித்தும் இணையவாசிகள் இதற்க்கு நிறைய குழந்தைகளை படிக்கவைத்திருக்கலாமே என்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.