24 special

கேப்டனை மறந்து நடிகர் சங்கம் செய்த அற்ப காரியம்...!

vijayakanth
vijayakanth

விஜயகாந்த் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் அப்படத்தில் நமக்கு சகல வசதிகளும் உணவில் பஞ்சமும் இருக்காது என்று கூறும் தமிழ் திரை உலக நடிகர்கள் பலர், என்ன உதவி வேண்டுமானாலும் விஜயகாந்திடம் கேட்டால் அவர் நிச்சயமாக அதை செய்து கொடுப்பார் என்று தமிழ் திரை உலகமே ஒரு நடிகரை குறித்து புகழ்ந்து பேசுகிறது என்றால் அதுவும் விஜயகாந்த் பற்றியே! இப்படி ஒட்டு மொத்த தமிழ் துறை உலகத்தால் கொண்டாடப்பட்ட ஒரு நடிகர் உடல் நல பாதிப்பால் சிகிச்சை பலனின்று கடந்த புதன்கிழமை உயிரிழந்த துக்கம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் வருத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவன் மற்றும் முக்கிய சினிமா பிரமுகர்களின் இறப்பிற்கு குவிந்த மக்கள் கூட்டத்தை விட அதிக அளவிலான மக்கள் கூட்டம் விஜயகாந்த்திற்கு குவிந்ததாக கூறப்படுகிறது. முதலில் மக்களின் பார்வைக்கு சென்னை தீவுதிடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடல் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈவேரா சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகம் வரை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு செல்லப்பட்டு நேற்று மாலை 6 மணி அளவில் அரசமரியாதை உடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. 


மதுரையில் பிறந்து நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்து முட்டி மோதி முயற்சிகளை மேற்கொண்டு நம்பிக்கையுடன் விடாது தனது திறமையின் மேல் மட்டும் நம்பிக்கை கொண்டிருந்த விஜயகாந்த் இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் ஒரு வாய்ப்பைக் கொடுத்தவர் இயக்குனர் காஜா, அதற்குப் பிறகும் முட்டி மோதியே ஒவ்வொரு பட வாய்ப்புகளையும் பெற்று வந்தார் இதற்கிடையில் அவரிடம் நடிப்பதற்கு 90களில் முன்னணி நடிகைகளாக இருந்த பல நடிகைகள் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் அந்த காலத்தில் அறிமுக நடிகர் என்றாலே தீண்ட தகாதவன் போல் பார்ப்பார்கள் அதுமட்டுமின்றி எனது நிறத்தை காரணம் காட்டியே பல நடிகைகள் என்னுடன் நடிக்க விருப்பமில்லை என்றும் நிராகரித்து வந்தனர் என 1986 இல் விஜயகாந்த் அளித்த பேட்டி ஒன்று அவரே கொடுத்திருந்தார்.

அப்படி பல துயரங்களையும் துன்பங்களையும் தாண்டி மக்கள் மனதில் இடம் பிடித்த நாயகனைத் தேடி பல நடிகைகளை அதற்குப் பிறகு அவருடன் நடித்தனர் என்பது தமிழகம் அறிந்தது, திரை வாழ்க்கையில் ஜொலித்துக் கொண்டிருந்த விஜயகாந்த் மக்களையும் விட்டுவிடாமல் பலரின் பசியை ஆற்றினார் பல உதவிகளை வழங்கினார் அதோடு நடிகர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பேற்கப்பட்டார். விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்று கடலில் தத்தளித்த நடிகர் சங்கத்தை மீட்டு  இதுவரை எந்த தலைவரும் செய்யாத வகையில் ஒரு குறிப்பிட்ட டெபாசிட் தொகையை நடிகர் சங்கத்திற்காக வைத்துவிட்டு சென்றவர். அதோடு கேப்டன் நடிகர் சங்க தலைவராக இருந்த அதே காலகட்டத்திலே நடிகர் திலகம் சிவாஜி உயிரிழந்தார் திரை உலகின் மிகப்பெரிய ஜாம்பவானான சிவாஜியின் இறுதி ஊர்வலத்தையும் இறுதிச் சடங்கை விஜயகாந்த் முன்னின்று ரஜினி, சரத்குமார், சத்யராஜ் போன்ற அனைத்து முன்னணி நடிகர்களையும் ஈடுபட வைத்து சிறப்பாக நடத்தி முடித்தார். 

ஆனால் தற்பொழுது விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஒரு நடிகர் சங்க உறுப்பினர்களையும் நடிகர்களையும் ஏன் தலைவரையும் பார்க்க முடியவில்லை! இதனால் சமூக வலைதளத்திலும் ஒரு பெரிய கேள்வி எழுந்துள்ளது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் சங்கமும் கேப்டனும் முன்னின்று எல்லாத்தையும் கவனித்து கொண்டார், ஆனால் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் ஒரு நடிகர் சங்கத்தினரையும் பார்க்க முடியவில்லை! விஷால், சூரியா வெளிநாட்டில் இருந்து வருத்தத்தை மட்டும் தெரிவித்தனர்,  நடிகர் கார்த்தி எங்கே சென்றார் என்றே தெரியவில்லை இதுகுறித்து விசாரிக்கும் பொழுது இவர்கள் அனைவரும் நியூ இயர் பார்ட்டி கொண்டாட சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் சங்கத்தையே கலைத்து விடலாம் எதற்கு இந்த நடிகர் சங்கம்? என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.