24 special

நடிகர் விஜய்யின் பக்கம் துண்டை போடும் திருமாவளவன்...!

Thirumavalavan,actor vijay
Thirumavalavan,actor vijay

அரசியலுக்கு விஜய் வருவது போன்ற செய்திகள் தமிழகத்தின் பிரதான கட்சிகளை மட்டுமல்ல கூட்டணியில் பதவியை பிடிக்கும் கட்சிகளையும் சற்று அசைத்து பார்த்துள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சி 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து போட்டியிட்டது அதில் அக்கட்சிக்கு கொடுக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் 4 தொகுதிகள் விசிக வெற்றி பெற்றது. கூட்டணி கட்சியாக இருந்தாலும் திமுக தனது ஆட்சிக் காலத்தில் விசிக'விற்கு எதிரான சில கருத்துக்களையும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது


இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதி காத்து வந்துள்ளார். வேங்கைவயல் பிரச்சனையில் இன்றளவும் எந்த ஒரு தீர்ப்பையும், அக்குற்றத்தில் ஈடுபட்டது யார் என்பது கண்டுபிடிக்காமல் இருந்து வருவதை பற்றி தன்னால் எந்த ஒரு கேள்வியையும் எழுப்ப முடியாமல் திருமாவளவனால் செய்தியாளர்கள் மத்தியில் கொந்தளிக்க மட்டுமே முடிந்தது. 

இதற்கு அடுத்ததாக விசிகவின் கட்சி கொடியை சில இடங்களில் நடுவதற்கும் ஆளும் திமுக தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருவதாகவும் அவ்வப்போது பிரச்சினைகள் எழுந்து வருகிறது. இதிலும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதை திருமாவளவன் தனது நெருங்கிய அரசியல் நண்பர்களிடம் கூறுவதாகவும் தகவல்கள் வெளிவந்தன. கர்நாடக தேர்தலிலும் காங்கிரசை நம்பி பிரச்சாரத்திற்காக சென்றால் அங்கும் அவருக்கு எந்த ஒரு தொகுதியும் வழங்கப்படவில்லை ஏமாற்றமே மிஞ்சியது! இந்த நிலையில் அடுத்து 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணிகள் இணைவது என்று குழப்பத்தில் உள்ள விசிக'விற்கு அதிமுகவில் இணைய முடியாது என்பது தெரிந்த ஒன்று ஏனென்றால் சமீபத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து 2024 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்பதை உறுதி செய்தார். 

இதற்கு அடுத்து மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபொழுதும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்பதையே மறுபடியும் உறுதி செய்தார். திமுகவில் ஏற்கனவே பல உரசல்களாலும் மோதல்களாலும் மன கசப்பு மற்றும் அடுத்த தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி வைத்தால் நம் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு கேள்விக்குறியாகிவிடும் என்ற பயத்திலும் திருமாவளவன் இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பாக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முதல் மூன்று அதிக மதிப்பெண்களை பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தொகுதி வாரியாக பரிசளித்து சான்றிதழ்களை வழங்கினார். அதில் அவர் பல அரசியல் கருத்துக்களையும் மாணவர்களுக்கு எடுத்து கூறினார், மேலும் அந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவர் நீங்கள் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். முன்னதாக நடிகர் விஜய் அரசியலில் நுழைவது போன்ற பல அறிகுறிகளை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த விழாவில் நடிகர் விஜய் அம்பேத்கர், காமராஜர், போன்ற பெரிய தலைவர்களை பற்றி படியுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். 

நடிகர் விஜயின் இந்த கருத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் தாமதிக்காமல் உடனே தனது கருத்தை கூறியுள்ளார். 'நடிகர் விஜய்யின் கல்வி தொடர்பான செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கிறது அவரின் செயல்பாடுகள் மூலம் மாணவர்கள் ஊக்கத்தை பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை சமூகநீதி தலைவர்களை பற்றி படியுங்கள் என்று விஜய் கூறியது பாராட்டுக்குரியது' என்று நடிகர் விஜய்யை புகழ்ந்து தள்ளி உள்ளார். இப்படி தொடர் கூட்டணி சிக்கல், அவ்வப்போது சில சம்பவங்களால் மனக்கசப்பு என வேண்ட வெறுப்பாக திமுக கூட்டணியில் இருந்துவருவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், அதிமுகவிலும் இணைய முடியாது என்பதை தெரிந்து கொண்ட பிறகு புதுவித மின்னல் அடித்தது போல் விஜய்யின் அரசியல் வருகை பற்றிய செய்திகள் கிடைத்தவுடன் அவரை பாராட்டி இந்த பதிவை கூறியுள்ளார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால் இப்பவே விஜய் பக்கம் ஒரு துண்டை போட்டால் விஜய் அரசியலில் வரும் பொழுது அவருடன் கூட்டணி அமைத்து சீட்டுகளை வாங்கியுடலாம் என அரசியல் கணக்குகளை  திருமாவளவன் போட்டுள்ளார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.