24 special

குஷ்பூவை அவதூறாக பேசிய திமுகவை சேர்த்த சிவாஜி....!திருப்பி அடித்த குஷ்பூ

Kushboo,sivaji krishnamoorthi
Kushboo,sivaji krishnamoorthi

திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் தொடர்ச்சியாக திமுகவிற்கு எதிர் அரசியல் செய்யும் கட்சிகளில் பயணிக்கும் பெண்களை விமர்சனம் வைப்பதை தொழிலாக கொண்டு செயல்பட்டு வருபவர்.பிரேமலதா தொடங்கி பாஜகவை சேர்ந்த குஸ்பு என பலரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்து இருக்கிறார், இந்த நிலையில் சமீபத்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுகூட்டம் நடைபெற்றது அதில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி குஷ்பூவை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.


குஸ்பூவை பழைய அண்டா என மிகவும் அருவருக்க தக்க வகையில் பேசிய திமுகவை சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, எனது பழைய அண்ணி குஸ்பு புரியுதா என மிகவும் மட்டமாக பேசினார், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நடிகை குஸ்பு இன்று கண்ணீருடன் பேட்டி கொடுத்தார்.பெண்கள் குறித்து தவறாக பேச  யார் உரிமை கொடுத்தது என குஸ்பு வேதனையுடன் பேச, என்னை பற்றி முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும், பாருங்கள் இனி தெரியும் என்னை சீண்டி பார்க்க வேண்டாம் எனவும் ஆவேசமாக குஷ்பூ பேசி இருந்தார். இந்த சூழலில் தான் தற்போது உடனடியாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்து இருக்கிறார் திமுக பொதுச்செயலாளர் துரை முருகன்.

திமுக தலைமை உடனடியாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து நீக்கிய நிலையில் குஸ்பு இந்த விவாகரத்தை எளிதில் விட மாட்டார் என்றும் மேலும் பாஜக இதை மையமாக கொண்டு திமுக பெண்களை மதிக்கும் விதம் இதுதானா என கேள்வி எழுப்பு வார்கள், ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்க துறை என தமிழகத்தில் ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள்.இப்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஸ்புவும் களம் இறங்கினால் அது மேலும் சிக்கலை உண்டாக்கும் என்பதால் வேறு வழியின்றி பயத்துடன் நடவடிக்கை எடுத்து இருக்கிறதாம் திமுக தலைமை.