தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக கட்சி வேகமெடுத்து பணிகளை செய்து வருகிறது. முதன் முதலாக கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் போட்டது திமுக. எதிர்க்கட்சியான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கட்சி தொடர் தோல்விகளே சந்தித்து வருகிறது. அதாவது, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய எடப்பாடி பழனிச்சாமி சிறுபான்மையின மக்களை தன் வசம் கொண்டுவர தனித்து களமிறங்கினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் பெரியதாக எந்த கட்சியும் இணையவில்லை, குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது பக்கம் வருவார் என்று எண்ணிய எடப்பாடி பழனிசாமி இன்று வரை எதிர்பார்த்திருந்தார். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனின் செயல்களும் விலகி அதிமுக பக்கம் போவார் என்று அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது. இதனால் அதிமுகவில் விசிக்காவிற்காக கதவுகள் திறந்தே இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் திருமாவளவன் திமுக்கிவிடம் 4 தொகுதிகள் கேட்டு வந்தார் அதுவும் தனி சின்னத்தில் போட்டியிட விருப்பம் காட்டி வந்தார்.
இதனால் திமுக கடந்த முறை போன்று இரண்டு தொகுதி மட்டும் திருமாவளவனுக்கு கொடுத்து முடித்துவிடலாம் என்று திமுங்க கணக்கு போட்டது. இதனால் விசிக அதிமுக கூட்டணியை நடலாம் என்ற தகவல் வந்தது. திமுக இதுவரை எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்ற திருமாவளவன் கூறினார். இதனால் நிச்சயம் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று திமுகவுடன் திருமாவளவன் தொகுதி தொடர்பாக கையெழுத்திட்டு தொகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி கனவு மொத்தமாக கலைந்துவிட்டது என்பது போல் திரும்பும் பக்கம் எல்லாம் தோல்வியே சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. ஆனால் திமுகவின் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க முயன்ற அதிமுக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது.
விசிகவை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் இழுக்க எடப்பாடி முயன்று வந்தார். அதிலும் அதிமுக கூட்டணிக்கு விசிக வந்தால் அவர்களுக்குத்தான் லாபம்.அவர்களுக்கு நிறைய இடம் கிடைக்கும். வராவிட்டால் 'Dont care' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரடியாக அழைப்பு விடுத்தார். திருமாவளவன் இதனை உறுதி படுத்தும் வகையில் அதிமுக என்னிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர் என்று கூறினார். இதனால் அதிமுக மூத்த தலைவர்களும் வருத்தப்பட்டனர் என்ற தகவலும் வந்தது.
அதிமுக தற்போது வரை எந்த கட்சிகளும் பெரியதாக இணையவில்லை. தேமுதிக கட்சியும் ஒரு ராஜசபா தொகுதி கேட்பதால் அதிமுக அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. பாமக கட்சிகளும் இருக்கட்டம் எட்டவில்லை அவர்களும் ஒரு ராஜசபா கேட்பதால் இழுபறி நடந்து வருகிறதாம். அதிமுக கடைசியாக எதிர்பார்த்து காத்திருப்பது தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி என்று கூறப்படுகிறது. அந்த கட்சியுடன் தான் திமுக இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எட்டாமல் இழுபறி நடந்து வருகிறது, இதனால் அதிமுக கூட்டணியில் எந்த ஒரு கட்சி இணைந்து தேர்தலை சந்திக்கபோகிறது என்பது வரும் நாட்களில் தெரியவரும்.