![A RASA](https://www.tnnews24air.com/storage/gallery/yTJG3C2U14gbYq8SW9Y5n9ELWzLTvdEpXr09busp.jpg)
இந்த உலகில் மொத்தம் ஏழு கண்டங்கள் உள்ளது. அந்த கண்டங்களில் வெவ்வேறு எண்ணிக்கையிலான நாடுகள் உள்ளது. அப்படி உள்ள அத்தனை நாடுகளிலும் காணாத ஒரு சிறப்பையும் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் நம் இந்தியா கொண்டுள்ளது. அது என்னவென்று உங்களுக்கே தெரியும் இருந்தாலும் தற்போது அதனை மீண்டும் நினைவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது மேலை நாடுகளுக்கு எங்கு சென்றாலும் அங்கு ஒரே விதமான கலாச்சாரம், மதம், மொழி, இனம் காணப்படும் ஆனால் இந்தியாவும் பல மொழிகளையும், பல இன மக்களையும், பல மதங்களையும், பலவகையான கலாச்சாரங்களையும் கொண்டது. கடுமையான பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்த போதிலும் நம் நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாட்டும் பேணிக் காக்கப்பட்டது.ஆனால் தற்போது நம் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை கேள்விக்குறியாக்கும் வகையில் திமுக எம்பி ஆக உள்ள ஆ ராசா மக்கள் மத்தியில் சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அதாவது சமீபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆ ராசா எம்பி இந்தியா ஒரு நாடு அல்ல! எப்பொழுதுமே இந்தியா ஒரு நாடு அல்ல! இந்தியாவை நாம் ஒரு நாடு என்று கூற வேண்டும் என்றால் அதற்கு ஒரே மொழி ஒரே பண்பாடு ஒரே கலாச்சாரம் இருந்தால் தான் கூற முடியும். அதனால் இந்தியாவை நாடு என்று கூற முடியாது இந்தியா ஒரு துணை கண்டம்! இதற்கு என்ன காரணம், தமிழ்நாட்டில் தமிழ் ஒரு மொழி ஒரு தேசம் அது ஒரு தனி நாடு, மலையாளம் ஒரு மொழி அதனால் அது ஒரு தேசம் மற்றொரு நாடு, ஒடியா என்பதும் ஒரு மொழி அது ஒரு தேசம் அதனால் அதுவும் மற்றுமொரு நாடு அப்படி பல மொழிகளையும் பல நாடுகளையும் ஒன்று சேர்த்தது இந்தியா. அதனால்தான் கூறுகிறேன் இந்தியா நாடு அல்ல அது ஒரு துணை கண்டம் இங்கு பல பண்பாடுகள் உள்ளது தமிழ்நாட்டில் ஒரு பண்பாடு, கேரளாவிற்கு சென்றால் மற்றொன்று, டெல்லிக்கு சென்றால் வேறுவிதமான பண்பாடு, அதேபோன்று ஒடியா மணிபூர் என அனைத்து நாடுகளுமே தனித்தனி பண்பாடுகளை கொண்டுள்ளது அதனால் அவை அனைத்தும் தனித்தனி நாடாகும், என்று கூறி எங்களைப் பார்த்தால் தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று கூறுகிறார்கள் தேர்தலுக்குப் பிறகு திமுக இல்லை என்றால் இந்தியாவே இருக்காது பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட வருகிறது சிறுவயதில் இருந்து இந்தியா ஒரு நாடு நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வில் நாங்கள் இருக்கிறோம் இப்பொழுது வந்து இந்திய நாடு இல்ல துணை கண்டம் இந்தியாவில் இருக்கிற ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு நாடு என்று கூறிக் பிரிவினையை விதைக்க பார்க்கிறாரா இவர்!.. என்ற வகையில் ஆ ராசாவின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. மேலும் ஆராசாவின் இந்த பேச்சு திமுகவையும் கடுப்பேற்ற வைத்துள்ளது ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் இண்டி கூட்டணிக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று கருத்துக்கணிப்பின் முடிவுகள் வந்துள்ளது இந்த நேரத்தில் தற்போது இருக்கும் வாக்கு வங்கியை மேலும் குறைக்கும் விதமாக பேசி உள்ளீர்கள் என அறிவாலயம் ஆ ராசா எம்பி கடிந்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.