மாணவர்கள் மத்தியில் விஜய் பேசிய அரசியலும், குட்டி கதையும் தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்க கூடிய திமுகவை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது..,விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன . விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்கினார்.தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்கப்பட்டது.பெற்றோர்கள், மாணவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருகந்தது.
விஜயின் இந்த முயற்சி வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முயற்சியாக பார்க்கப்பட்டது ஏன் என்றால் 234 தொகுதிகளில் இருந்து மாணவர்களை வர வைப்பதன் மூலம் அவர்கள் தங்கள் பகுதியில் விஜய் குறித்தும் விஜய் பேசியது குறித்தும் எடுத்து சொல்வார்கள் இதன் பின்னணியில் அரசியல் கணக்கு இருப்பதாக பலரும் கணக்கு போட்டனர்.இந்த சூழலில் தற்போது விஜய் மாணவர்கள் மத்தியில் நீங்கள் எல்லாம் வரும் கால வாக்காளர்கள், நாம் யாருக்கு வாக்கு அளிப்பது என்பது முக்கியம் நம் கையை வைத்து நம் கண்ணை நாமே குத்தி கொள்கிறோம் இதெல்லாம் சரியா என பேசினார்.
அதோடு ஓட்டுக்கு பணம் வாங்கி கொண்டு ஒட்டு போட்டால் நமக்கு நல்லது நடக்கிறதா சொல்லுங்கள் ஒன்னும் இல்லை உங்கள் பெற்றோரிடம் காசு வாங்கி கொண்டு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்லுங்கள் அப்புறம் என்ன நடக்கிறது பாருங்கள் என விஜய் தெரிவித்து இருந்தார்.இங்கு தான் பெரும் சிக்கல் உண்டாகி இருக்கிறது ஏற்கனவே ஈரோடு இடை தேர்தலின் போது திமுக பணம் கொடுத்து வாக்குகளை பெற்றதாகவும், எதிர் கட்சியான அதிமுகவும் பணம் கொடுப்பதாகவும் பெரும் குற்ற சாட்டு எழுந்தது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வாக்கிற்கு பணம் கொடுப்பதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வெற்றியே தேவையில்லை என்று தெரிவித்து இருந்தார்.
தற்போது விஜய்யும் குட்டி ஸ்டோரி மூலம் அதனை உறுதி செய்து இருப்பது தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.