கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவின் தலைமை அறிவாலயத்தில் முக்கிய அமைச்சர்களை கூட்டி வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் தொகுதிகளை பார்த்து ஒதுக்க வேண்டும், ஏற்கனவே ஒதுக்கிய தொகுதிகளை ஒதுக்கி விடக்கூடாது என்று ஆலோசனை நடத்தினர் என தகவல் கிடைத்தன!
அதிலும் கடந்த முறை போட்டியிட்ட பலருக்கு அடுத்த வருடம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு அளிக்காமல் புதிய வேட்பாளர்களின் நிறுத்துவதற்கான வேலைப்பாடுகளில் திமுக இறங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதன்படி கரூர் தொகுதியில் திமுக தங்கள் வேட்பாளரை நிறுத்தவும், திருச்சி அல்லது ஈரோட்டிற்கு ஜோதி மணியை மாற்றவும், திருவள்ளுவர் தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் காங்கிரசுக்கு காஞ்சிபுரத்தையும், விருதுநகரில் வைகோவின் மகனை நிறுத்தவும், சிவகங்கை தொகுதியில் திமுகவே நேரடியாக போட்டியிடவும், தேனி மற்றும் ராமநாதபுரத்தை காங்கிரசிற்கு அளிக்கவும் திமுக தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியானது..
இந்நிலையில் திமுகவின் கூட்டணி முடிவு இவ்வாறு இருக்க, மீண்டும் நான் ஏற்கனவே போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் மறுபடியும் போட்டியிட உள்ளதாக திருமாவளவன் அறிவித்தது திமுக கூட்டணியை முகம் சுளிக்க வைத்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் திருமாவளவன் திமுக கூட்டணியில் பானை சின்னத்தில் நின்று வெற்றி பெற்று சிதம்பர தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே திமுகவிற்கும் திருமாவளவனுக்கும் ஒரு பிரச்சனை வெடித்தது. உதயசூரியன் சின்னத்தில் திருமாவளவன் திமுக தலைமை நிற்க சொல்ல, முடியாது நான் பானை சின்னத்தில் தான், அதுவும் என்னுடைய தனி சின்னத்தில் தான் நிற்பேன் என்று திருமாவளவன் கூறி அதன்படியே நின்றது இரு கட்சிகளுக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் தேர்தல் முடிந்தவுடன் அந்த விவகாரம் அப்படியே கண்டுகொள்ளாமல் இருதரப்பிலும் விடப்பட்டது.
முன்னதாக விஜய் அரசியலுக்கு வருவதை விமர்சிக்கும் வகையில் திருமாவளவன் பேசியிருந்த கருத்தால் சமூக வலைதளங்களில் மிகவும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான திருமாவளவன் அடுத்தபடியாக நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட உள்ள தொகுதி பற்றியும் திடுகிடும் தகவலை கூறியுள்ளார்.
அதாவது சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிட உள்ளதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது, கோவில்களில் நடக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக அரசும் சட்டமும் சொல்வதை தீட்சதர்கள் கேட்டு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதோடு எந்த மாநிலத்திலும் நடக்காத வகையில் சினிமாவில் நடிப்பவர்கள் அரசியலில் வருவது நம் மாநிலத்தில் நடக்கிறது என்று நான் கூறிய விமர்சனம் விஜய்க்கு எதிராக கூறியது அல்ல பொதுவாக கூறினேன் அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன் என்றும் பேட்டி அளித்துள்ளார்.
ஏற்கனவே திமுக தலைமை எந்தெந்த தொகுதிகளில் யாரை நிற்க வைக்கலாம் என்று முடிவு செய்து ஒரு ஆலோசனை மேற்கொண்டு ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கும் வேளையில் இப்படி திடீரென சிதம்பரம் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட உள்ளேன் என்று வெளிப்படையாக திருமாவளவன் கூறியது மீண்டும் விசிக மற்றும் திமுக கூட்டணியிடையே சற்று விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை நாட்கள் விசிக’விற்கு மறைமுகமாக திமுக அளித்து வந்த தொந்தரவுகளை பொறுமையாக சகித்து வந்த திருமாவளவன் தற்போது தேர்தல் நெருங்கும்வேளையில் தனது வேலையை காண்பித்துள்ளார் என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆதலால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவனை அனுப்பிவிடலாமா இன்று அறிவாலய வட்டாரங்களில் சிலர் யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.