கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான கோவையில் வைத்து நடிகர் ரஞ்சித் கொடுத்த பேட்டி தற்போது விசிக வினரை அதிர்ச்சி அடைய செய்து இருப்பதுடன் சமூக வலைத்தளங்களில் நடிகர் ரஞ்சித்திற்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.நான் புதிய படம் ஒன்றை இயக்கி இருப்பதாகவும் அது குறித்து செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என ரஞ்சித் தரப்பில் செய்தியாளர்களுக்கு அழைப்பு வந்தது, அப்போது பேசிய ரஞ்சித் நான் கொங்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பை மையமாக கொண்டு குழந்தை கேர் ஆப் கவுண்டம்பாளையம் என்ற படத்தை எடுத்து இருப்பதாகவும் இது முழுக்க முழுக்க பெண் குழந்தைகள் பாதுகாப்பை மையமாக கொண்ட படம் என குறிப்பிட்டார்.நிருபர் ஒருவர் பெண் குழந்தைகளை அரசு பாதுகாக்காதா ரெஜிஸ்டர் மேரேஜ் செய்தால் போதும் என கேட்க அதற்கு ரஞ்சித் கொடுத்த பதில் தான் தரமாக இருந்தது, பள்ளி யில் சேர்க்க பெற்றோர் கையெழுத்து வேணும் ஆதார் எடுக்க பெற்றோர் கையெழுத்து வேணும், கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர் கையெழுத்து வேணும், பெற்றோர் சொத்தை கொடுக்க கையெழுத்து வேணும் ஆனால் திருமணம் செய்ய பெற்றோர் கையெழுத்து தேவை படாது என்ன சட்டம் இது?
தமிழ் சினிமாவில் தற்போது சில ஆண்டுகளாக சாதியை மையமாக கொண்டு சாதியை விற்று சினிமா செய்யும் அரசியல் வந்து இருப்பதாக ஆவேசமாக பேசினார் ரஞ்சித் இயக்குனர் ரஞ்சித் மற்றும் திருமாவளவன் போன்றோர் பெயரை மறைமுகமாக பத்திரிகையாளர்கள் கேட்க அது தான் யார் என்று உங்களுக்கே தெரியுமே என நேரடியாக பேசினார் ரஞ்சித்.என் பெண்களை காக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு நாடக காதலுக்கு எதிராக எனது படம் இருக்கும் என அதிரடியாக தெரிவித்தார் ரஞ்சித். தற்போது ரஞ்சித் நேரடியாக இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் திருமாவளவன் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் தற்போது சமூக வலைத்தளங்களில் விசிக மற்றும் இயக்குனர் பா ரஞ்சித் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் நடிகர் ரஞ்சித் பேட்டியை விமர்சனம் செய்து வருகின்றனர்.நடிகர் ரஞ்சித் பேட்டியை பார்த்து விட்டு அவர் கூறியது சரியா தவறா என உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.