24 special

திருமாவளவன் கேட்ட அந்த கணக்கு விரட்டிய அறிவாலயம்!

hirumavalvan, udhayanithi
hirumavalvan, udhayanithi

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிற்கான ஏற்பாடுகள் மற்றும் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக ஒவ்வொரு கட்சி சார்பில் நடைபெற்று வருகிறது அதன்படி திமுகவில் மாவட்ட வாரியாக சென்னை அறிவாலயத்தில் தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் திமுக மாவட்ட நிர்வாகிகள் பல அதிருப்தி மற்றும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக மதுரை, தர்மபுரி மற்றும் இன்னும் சில மாவட்டத்தில் உள்ள திமுக எம்பி களை குறித்து அதே மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் குற்றம் சாடியதோடு அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அதிருப்தி ஏற்படுத்துவதாகவும் அதனால் மீண்டும் அவர்களுக்கு சீட்டு வழங்கக் கூடாது என்றும் முறையிட்டுள்ளனர். மேலும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள உட்கட்சி பூசல் குறித்தும் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது அதே சமயத்தில் உட்கட்சி பூசல் குறித்த சமாதான பேச்சு மற்றும் பஞ்சாயத்துகளும் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதோடு மதுரையில் இதுவரை திமுக சார்பில் எம்பி வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்று கண்டிப்பாக வருகின்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று திமுக மதுரை மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


அதேபோன்று தேனியிலும் வெற்றிக்கான நடவடிக்கைகள் ஈடுபட வேண்டும் என்று ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் வேலூர், அரக்கோணம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி நிர்வாகிகள் அறிவாலயத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதில் வேலூர் திமுக நிர்வாகிகளுக்கு நடத்தப்பட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கடந்த முறை குறைந்த அளவிலான ஓட்டு வித்தியாசத்தில் திமுக எம்பி வெற்றி பெற்றதை ஒருங்கிணைப்பு குழு சுட்டிக்காட்டி அடுத்த முறை இலட்ச வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி அடைய வேண்டும் என்பதையும் அறிவுறுத்து உள்ளது. அதோடு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பொழுது விழுப்புரத்தில் விசிக எம்பியாக உள்ள ரவிக்குமாரின் செயல்பாடுகள் குறித்து விழுப்புர திமுக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததோடு விழுப்புரத்தில் திமுகவினர் நேரடியாக போட்டி போட வேண்டும் என்றும் ரவிக்குமார் எம் பி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அமைச்சர் உதயநிதி தொகுதிக்கான வெற்றி வேட்பாளரை தலைவர் முடிவு செய்து அறிவிப்பார் அவர் யாரை அறிவித்தாலும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நபர் நமது கலைஞர் கருணாநிதி அவர்கள் என்று நினைத்து அவர்களின் வெற்றிக்காக அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி தொடர்ச்சியாக திமுகவின் மாவட்ட நிர்வாகிகள் விசிக வேட்பாளர்கள் அல்லாமல் திமுக வேட்பாளர்களை நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து வர மறுபக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மொத்தம் நான்கு தொகுதிகளை விசிக கேட்க முடிவு செய்திருப்பதாகவும் ஏதாவது மூன்று தனி தொகுதிகளையும் ஒரு பொது தொகுதிகளையும் திமுகவிடம் கேட்டு பெற திருமாவளவனிடம் விசிக மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விசிகவின் கோரிக்கை திமுக மத்தியில் எடுபடுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.இதுமட்டுமில்லாமல் திமுக உட்கட்சியில் விடுதலை சிறுத்தைகளுக்கு சீட்டு கொடுத்தால் எங்களால் வேலை செய்யமுடியாது எனவும் சில மாவட்ட அளவிலான நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.