கிறிஸ்தவர்கள் திருச்சபை என்ற ஒரு அமைப்பில் இருப்பது வழக்கமானது, அந்த திருச்சபையின் கீழ் வரும் கிறிஸ்தவர்கள் அனைவரும் செலுத்தும் காணிக்கைகள் அனைத்தும் அந்த திருச்சபைக்கே சேரும் அதற்குப் பிறகு அந்த திருச்சபை அந்த காணிக்கைகளை திருச்சபையின் வளர்ச்சிக்காகவும் அல்லது திருச்சபையின் கீழ் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வளர்ச்சிக்காகவும் அதனை செலவிடும்! ஆனால் இங்கு ஒரு திருச்சபையின் உறுப்பினர்கள் செலுத்தும் காணிக்கைகள் அனைத்தும் திருச்சபையின் மேல் அதிகாரத்தில் உள்ளவர்களின் பாக்கெட்டுக்கு செல்வதாக குற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் இரணி அம்மன் கோவில் அருகில் செவன்த் டே அட்வெண்டிஸ்ட்ஸ் திருச்சபை ஒன்று இயங்கி வருகிறது. இந்த திருச்சபையின் கீழ் 27 பள்ளிகள் மற்றும் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திருச்சபையின் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் புதிய சர்ச் கட்டுகிறேன் பள்ளி கட்டுகிறேன் என்ற பெயரில் திருச்சபை உறுப்பினர்களிடம் காணிக்கை வசூலித்து மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளதாக திருச்சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவை ஈடுபட்டுள்ளனர்.
திருச்சபையின் உறுப்பினர்கள் திருச்சபை முன்பு தர்ணாவில் ஈடுபட்டதை அறிந்த ஓட்டேரி காவல் அதிகாரி நேரில் வந்து எந்த பிரச்சினையாக இருந்தாலும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுங்கள் என்ன என்று தீவிரமாக விசாரிக்கலாம் அதை விடுத்து விட்டு இங்கே தர்ணாவில் ஈடுபடக்கூடாது என்பதையே கூறி உள்ளார் மேலும் வாகனத்தை விட்டு வெளியே கூட வராமல் திருச்சபையில் இருந்து பிரச்சனை பண்ணாதீங்க எதுனாலும் காவல் நிலையத்திற்கு வாங்க அங்க பேசிக்கலாம் என்பதை கூறியுள்ளார் மேலும் நாங்கள் பிரச்சினை செய்வதற்காக வரவில்லை இது குறித்து திருச்சபை நிர்வாகிகளிடம் கேட்க மட்டுமே வந்திருக்கிறோம் என்று திருச்சபையை சேர்ந்த உறுப்பினர்கள் கூறியதற்கும் உடன்படாமல் ஓட்டேரி காவல் அதிகாரி திருச்சபை முன்பு இருக்கக் கூடாது என்பதையே கூறிவந்துள்ளார். இப்படி திருச்சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பண மோசடி குறித்த புகார் தெரிவித்து வந்த நிலையில் திருச்சபையைச் சேர்ந்த நிர்வாகிகள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஜாதி ரீதியாக தன்னை மிகவும் இழிவு படுத்தி பேசியதாகவும் எஸ்தர் ராணி என்ற பெண் திடுக்கிடும் பல புகார்களை முன் வைத்தார்.
நான் இந்த திருச்சபையில் துப்புரவு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது அனைத்து பெண்களும் பணி முடிந்து சென்ற பிறகும் என்னை மட்டும் அதிக நேரம் வேலை செய்ய வைத்துள்ளார்கள் காலையில் மிக வேகமாக வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்கள் கேமரா இருக்கும்போது ஒரு மாதிரியும் கேமரா இல்லாத இடத்தில் ஒரு மாதிரியும் பேசுகிறார்கள். அதிலும் குறிப்பாக திருச்சபையின் மேனேஜராக உள்ள வைட் டேவிட் எனக்கு தேவை இல்லாமல் பணம் கொடுத்து சும்மா வைத்துக் கொள் என்று கூறுகிறார்! அதோடு தேவதாஸ் என்பவரும் தன்னிடம் தவறாக பேசி உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இருப்பினும் அவர்களுக்கு நான் உடன்படாம் இது குறித்து கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டபோதும் பாலியல் துன்புறுத்தலுக்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள் என்று காவல் அதிகாரி கேட்டதாக எஸ்தர் ராணி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து என் மீது திருட்டுப் பழி சுமத்தி திருச்சபையை விட்டு வெளியேற்றினார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் இது குறித்து மற்ற நிர்வாகியான ஃபாதர் ஜோனர்தனிடம் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் கேட்டுள்ளது அதற்கு அவர் சபையின் உறுப்பினராக உள்ள கென்னடி என்பவர் தான் பணத்திற்காக புகார் அளிப்பவர்களை தூண்டி புகார் கொடுக்க வைத்துள்ளதாக கூறியுள்ளார். இப்படி திருச்சபையின் மீது குற்றம் சுமத்துவர்களும் திருச்சபையின் நிர்வாகிகளும் மாறி மாறி குற்றம் தெரிவிக்கின்றனர் நிர்வாகிகள் மத்தியிலும் பிரச்சனை இருப்பதால் இந்த விவகாரத்தில் எது உண்மை என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது மற்ற உறுப்பினர்களின் கேள்வியாக உள்ளது.