வட இந்தியாவை பொருத்தவரை ராகுல் காந்தி எப்படியோ அப்படிதான் தமிழகத்திற்கு உதயநிதி என்று அண்ணாமலையால் விமர்சனங்களை பெற்று வரும் அமைச்சர் உதயநிதி சனாதனம் ஒழிப்பு குறித்து பேசிய கருத்துக்கள் அவரது தலையை பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அரசியலில் நுழைந்த ஆரம்ப காலத்தில் எந்த பதில் கேட்டாலும் கிண்டலாக சிரித்தபடி பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் காலப்போக்கில் சற்று கோபமாக பேசவும் கற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது உதயநிதியிடம் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்கும்போது ஒரு உதயநிதி ஸ்டாலினால் பதில் கூற முடியவில்லை சில இடங்களில் பதில் கேட்டால் திணற துவங்கினார்.
இந்த நிலையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இரு சமூகத்திற்கிடையே பிரச்சனையை தூண்டிவிடும் வகையில் பேசி இருக்கிறார் என புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன... இதனால் ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தும் சனாதனத்தை ஆதரிப்பவர்கள் உதயநிதி கருத்திருக்கு எதிராக திரும்பி உள்ளனர். பல பகுதிகளில் இருந்து உதயநிதிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவுகளும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது. சனாதனத்தை மட்டுமே உதயநிதி கூறினார் இந்து மத மக்களைப் பற்றி தெரிவிக்கவில்லை என்று திமுக சமாளித்தாலும் உதயநிதியின் உண்மை கருத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான வீரமணி தெளிவு படுத்தியதும் உதயநிதிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் முதல்வர் மகனுக்கு எதிரான பதிவுகள் டெல்லி தலைமை இடத்தில் இருந்து வருவதோடு சட்ட பிரச்சனைகளும் தற்போது உதயநிதியின் காலை சுற்றியுள்ளது! இந்த நிலையில் இவரது பேச்சிற்கு காங்கிரஸ் அமைதி காக்கிறது அவரின் கருத்துக்கு உடன்படுகிறதா என்றும் இந்தியா கூட்டணிக்கு கிடைக்க இருக்கும் ஐந்து சதவீத வாக்கு வங்கியை உதயநிதி கெடுத்துவிட்டார் அவர் ஒருவரே போதும் இதே கருத்துக்களை இன்னும் முன் வைத்தால் 20% வாக்குகளை இந்தியா கூட்டணி இழக்க நேரிடும் என்று அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதனால் காங்கிரஸ் இதற்கு மேல் அமைதியாக இருக்கக் கூடாது என்று அதன் அமைப்பு பொதுச்செயலாளர் எல்லா மதத்தையும் மதிப்பவர்கள் நாங்கள், அதுவே எங்கள் கட்சியின் கொள்கை மற்ற கட்சிகளுக்கு கருத்துக்களை தெரிவிக்கும் சுதந்திரம் இருக்கிறது அதில் நாங்கள் தலையிட போவதில்லை என்ற வகையில் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என பதில் அளித்துள்ளார்.
இப்படி சுற்றிலும் அரசியல் களம் முழுவதுமே உதயநிதியின் கருத்துக்களுக்கு எதிர்ப்புகளே நிலவி வருகின்ற சமயத்தில், கருத்தியல் கோட்பாடு குறித்து நான் பேசுவது இந்துக்களுக்கு எதிராக திருப்பப்படுகிறது என்று திருமாவளவன் புலம்பியுள்ளார். அதாவது, கடந்த திங்கட்கிழமை அன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சனாதன ஒழிப்பு மாநாட்டில் நானும் பங்கேற்று உரையாற்றினேன், சனாதனத்தை ஒழிப்பது என்று பேசுவதற்கு பின்பு ஒரு கருத்தியலையும் ஒரு கோட்பாட்டையும் எதிர்த்துப் பேசுகிற அர்த்தமாகிறது! இதனை இந்துக்களுக்கு எதிராக பேசுவது போன்று திரிக்கப்படுகிறது அதுவே அதிர்ச்சியாக உள்ளது என்று புலம்பி உள்ளார்.
இதனால் இனிமேல் மோடி எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு போன்ற கருத்துக்களை மட்டும் முன் வைக்கலாம் சனாதன எதிர்ப்பு போன்ற கருத்துக்களை முன் வைப்பதற்கு வாய்ப்பளிக்காமலும் வாய் திறக்காமல் இருக்கலாம் என திருமாவளவன் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படியே எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் தேர்தல் வரும்வரை ஒட்டிவிடலாம் என திருமாவளவன் தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.