திமுகவில் இளைஞர் அணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பற்றி தகாத வார்த்தைகளால் வாய்க்கு வந்தபடி பேசியது தற்போது சனாதனத்தை ஆதரிப்பவர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி சனாதன ஒழிப்பு என்ற பெயர் இந்த மாநாட்டிற்கு வைத்திருப்பது மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார் இது மட்டுமல்லாமல் சனாதனத்தை பின்பற்றுபவர்களை பற்றியும் சனாதனதர்மத்தை பெரிதாக போற்றும் பாஜக அரசை பற்றியும் தாக்கி பேசியதோடு மட்டுமல்லாமல் இந்திய நாட்டில் இருந்து இந்த சனாதன கொள்கை முற்றிலுமாக ஒழிய வேண்டும் என்பதை மையக்கருத்தாக வைத்து பேசினார்.
உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கையை டெங்கு மலேரியா போன்ற கொடிய நோய்களோடு ஒப்பிட்டு அதை ஒழிக்க வேண்டும் என்று பேசியதால் இந்துத்துவத்தை மதிப்பவர்களும் பாஜகவினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் என்பது நிலையான ஒன்று மேலும் அதனை மாற்ற முடியாது என்று கூறியதோடு எல்லாவற்றிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அதற்காக உருவானது தான் திராவிட கழகமும் கம்யூனிச இயக்கமும் எனக் கூறியுள்ளார். இவ்வாறு சனாதனத்தை எதிர்த்து பேசியது உள்துறை அமைச்சர் அமித்ஷா வரையில் பரவிய நிலையில் சனாதனத்தை பெரிதென மதிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு குறித்து காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது மேலும் பாஜகவின் எதிர்ப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது ஒட்டுமொத்த இந்தியாவே சனாதனம் குறித்து தான் பேசிக் கொண்டிருக்கிறது மேலும் இதுகுறித்து பேச வேண்டும்என்று கூறியதோடு இது மட்டும் இல்லாமல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது மேலும் சனாதனம் பற்றி அவர் பேசியது சரிதான் என்பதில் உறுதியாக உள்ளார் இந்தியா கூட்டணி தற்போது வலுப்பெற்று வருகிறது இதனை பொறுக்க முடியாமல் தான் பாஜக அரசு இது மாதிரியான செய்திகளை பரப்பி வருகிறது என பாஜக அரசை கடுமையாக தாக்கியும் பேசியுள்ளார்.
மேலும் உதயநிதி பேசியது சரியானது தான் என அவரே உறுதியாக இருக்கும் நிலையில் சாதனம் என்பது மாறாத ஒன்று என்றும்இதனால் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி பல நன்மைகளை செய்து வருகிறது என்று கூறியதோடு சனாதனத்தை பற்றி பேசியதற்கு எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று சவால் விட்டு பேசி உள்ளார் இதற்கெல்லாம் பின்னணி என்ன என்று விசாரித்த போது அரசியல் விமர்சகர்கள் பல பகீர் தகவலை தெரிவித்துள்ளனர். அதாவது சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாமல் ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்தது வேறு நிறைவேறாமல் போனதால் அந்த நீட் ரத்து விவகாரம் உதயநிதி ஸ்டாலினுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த நிலையை சரிசெய்ய வேண்டும் என்பதற்காக தான் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எடுத்துள்ளதாக தெரிகிறது நீட் போராட்டத்தை மக்கள் மத்தியில் மடை மாற்றுவதற்காக பேசியது தற்போது அவருக்கு வினையாக அமைந்துள்ளது தற்போது அதைவிட பெரிதாக சனாதனத்தை கையில் எடுத்துள்ளார் இது உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் இப்பொழுதே அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.