24 special

திருமாவளவனின் பச்சோந்தி அரசியல்... அடிமைத்தனத்தை மறைக்க ஒரு லட்சம் காப்பியா? கொந்தளிக்கும் பிரமுகர்கள்!

Thirumavalan
Thirumavalan

’தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்பர், பட்டியலின மக்களின் பாதுகாவலன் என்றும் தன்னை விட்டால் தாழ்த்தப்பட்ட மக்களை காக்க ஆள் இல்லை என்ற பிம்பத்தில் கட்சி துவங்கி அதன் மூலம் பிரபலமாகி திராவிட கட்சிகளில் மாறி மாறி கூட்டணி வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் திருமாவளவனுக்கு தற்பொழுது தாழ்த்தப்பட்டவர்களின் பிரஜை என்ற பிம்பம் எடுபடாமல் போய்விட்டது.


திராவிட கட்சிகளில் மாறி, மாறி கூட்டணி வைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிரச்சினை என்றவுடன் கூட்டணி கட்சிகளின் கோபத்திற்கு ஆளாக கூடாது என்ற கீழ்த்தரமான அரசியல் எண்ணத்துடன் தன் கட்சியை பிழைக்க திருமாவளவன் நடத்தி கொண்டிருக்கிறார் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு குறிப்பாக அவரை நம்பி சென்ற தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு வந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் நாளைக்கு எந்த கட்சியிலாவது ஏதாவது நாடகம் செய்து தொகுதிகளை வாங்கினால் கூட மக்களிடம் வாக்கு கேட்டு சென்றால் கண்டிப்பாக விரட்டியடிக்கப்டுவோம் என்று உணர்ந்த திருமாவளவன் தனது அரசியல் நாடகத்தை "தலித் அரசியலில்" இருந்து "மனுஸ்மிருதி அரசியலுக்கு" தற்காலிகமாக மாறியுள்ளார். அவ்வளவே தவிர அப்படியே மனுஸ்மிருதிக்கு எதிராக போராட வாழ்க்கை அர்ப்பணிப்பார் என்றெல்லாம் இல்லை.

நாளைக்கே ஏதாவது ஒரு திராவிட கட்சி 10 முதல் 15 தொகுதிகள் ஒதுக்கினால் போதும் சிரித்துக்கொண்டே பிரச்சாரத்துக்கு கிளம்பிவிடுவார். இவ்வளவு ஏன் பிரச்சாரம் செல்லும் வழியில் கோவில் இந்துக்கள் இருந்தால் அப்படியே சிரிப்பு மாறாமல் கும்பிடு போட்டு ஒரு புகைப்படமும எடுத்துக்கொள்வார். இதுதான் திருமாவளவனின் அரசியல் போராட்டமே தவிர வேறு ஒன்றும் சரித்திர புகழ் போராட்டம் அல்ல!’’ என்கிறார்கள் அவரை அறிந்த முன்பு கூட்டணி கட்சியில் இருந்த கட்சித் தலைவர்கள்.

அதனை பிரதிபலிக்கும் வகையில், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அக்கப்போர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘’அந்த அறிவிப்பில்,’’நவம்பர் 6ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் மனுஸ்மிருதிகளை அச்சிட்டு மக்களுக்கு வினியோகம் செய்ய இருக்கிறோம்.மனுஸ்மிருதியை நமது பெண்கள் படிக்க வேண்டும். பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் காரணமான உளவியலுக்கு அடிப்படை மனுஸ்மிருதி.

பெண்களை சபலப் புத்தி கொண்டவர்கள் என்கிறது மனுஸ்மிருதி. அதனால் ஆண், கணவர் கண்காணிப்பில் பெண் இருக்க வேண்டும் என்கிறது. பிராமணர் பெண் உள்ளிட்ட அனைத்து சமூகப் பெண்களையும் இப்படித்தான் குறிப்பிடுகிறது மனுஸ்மிருதி. அதன் உண்மை முகத்தை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக 1 லட்சம் பிரதிதிகள் வழங்குகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. அத்துடன், ’’புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார்  அவர்களை ஏற்றுக்கொண்டவர்களால்  

மனுஸ்மிருதி, ஆர்எஸ்எஸ் , பாஜக ஆகியவற்றை  ஏற்றுக்கொள்ள முடியாது" எனவும் அவர் தெரிவித்துள்ளது தேரைப்பிடித்து தெருவில் இழுத்துவிட்ட கதையாக இருக்கிறது திருமாவளவனின் அறிக்கையும், கருத்துக்களும்.

இதுகுறித்து பாஜக பிரமுகர்கள் கூறுகையில், ‘’திருமாவளவன் என்ன கூறியிருக்கிறார் என மக்கள் கண்காணிக்க வேண்டும். நவம்பர் 6 ம் தேதி மனுஸ்மிருதி கொடுக்கிறேன் என வீட்டுக்கு வந்தால், விடக்கூடாது. இவர்டகள் கிரிப்டோ கிருஸ்துவர்கள். மனுஸ்மிருதிக்கும் அவர்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? 8 கோடி நகல் எடுத்துக்கூட அனைவருக்கும் தரலாம். ஆனால், மக்களுக்கு தெரியும் யார் யார் செயல்பாடுகள் எப்படி என்று தெரியும். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல், திருமாவளவனின் இந்த செயலால் இந்துக்கள் அதிகளவில் எழுச்சியுடன் சங்பரிவார்களை ஆதரிப்பார்கள்.

மனுஷ்மிருதியை வைத்து மூர்க்கமாக ஜாதி அரசியல் செய்வது திராவிடகட்சிகள் மட்டுமே. திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு திருமாவளவன் இப்படி செயல்படுவது, பேசுவது என்ன மாதிரியான அரசியல்? இல்லாத மனுஷ்மிருதியை நடைமுறைப்படுத்த அவர்கள் எடுக்கும் முயற்சியை மக்கள் நிராகரிப்பர்.

மனுஸ்மிருதி புத்தகத்தை எந்த ஒரு பார்ப்பனர் வீட்டிலும் கூட பார்க்க முடியாது. இல்லாத ஒன்றை தேடி பிடித்து ஒரு லட்சம் அச்சிட்டு என்ன அரசியல் செய்ய நினைக்கிறார் திருமாவளவன்:?.நீங்கள் கூட்டணி இருக்கும் திராவிட கட்சி ஆரிய கோட்பாடு மனநிலை கொண்டது என்பது உங்களுக்கு தெரியாது? நீங்கள் திராவிட கட்சியின் அடிமை இல்லை என்பது போல் நடிப்பது இதற்கு அம்பேத்கர் போன்றவர்களை மேற்கோள்காட்டுவதா? ஆதிக்குடி தமிழர்களை அடகு வைத்து நன்றாக வியாபார அரசியல் செய்கிறார் திருமாவளவன்.

சனாதனம், மனுஸ்மிருதி என தப்பித்துக் கொள்கிறார். தைரியமிருந்தால், இல்லாத சனாதனத்தை இன்று பேசும் அவர், அப்படியே இஸ்லாத்திலும், கிறித்துவத்தின் அடிமைத்தனங்கள் பற்றி பேசுவாரா திருமாவளவன்? அதற்கு அவருக்கு தைரியமிருக்கிறதா? என எச்சரிக்கிறார்கள்.