தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் படங்களுக்கு எப்போதும் பெரிய எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடயே இருக்கும் அந்த வகையில், விரைவில் திரைக்கு வர இருக்க கூடிய நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகுமா? என்ற கேள்வி ஒரு புறம் சென்று கொண்டு இருக்க மறு புறம் விஜய்க்கு அரசியல் ரீதியாகவும் கடும் அழுத்தம் உண்டாகி இருக்கிறதாம்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் திரைப்படங்களை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட், கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் இரண்டு மட்டுமே வெளியிடு வதாகவும் மற்ற தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இதனால் பெரும் பாதிற்பிற்கு உள்ளாகி இருப்பதாகவும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் புளம்பி வருகின்றனர்.
கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை, இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது, படம் போதிய வருமானத்தை பெறவில்லை என்பதால் அடுத்த படம் ஒன்றை தங்களது தயாரிப்பில் விஜய் நடித்து கொடுக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்ததாம்.
விஜயை வைத்து சன் பிக்சர் தயாரித்த வேட்டைக்காரன், சுரா, சர்கார், பீஸ்ட் என நான்கு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத காரணத்தால் விஜய் தரப்பு மெல்ல ஒதுங்கி தமிழ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இல்லாத தெலுங்கு பக்கம் தாவி இருக்கிறார் விஜய்.
இந்த சூழலில் விஜய் நடிப்பில் புதிதாக உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்க பட்ட சூழலில் அஜித்தின் துணிவு படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அப்படகுழு அறிவித்து இருக்கிறது, துணிவு திரைப்படத்தை உதயநிதி மாநிலம் முழுவதும் விநியோகம் செய்ய இருக்கிறாராம்.
இதனால் விஜயின் வாரிசு திரைப்படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைக்கும் என்று கூறப்படுகிறது, கடைசியாக வெளியான விஜயின் பீஸ்ட் திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில் எப்படியும் ஹிட் குடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய் இருக்கிறார். ஆனால் அதற்கும் இப்போது சினிமா அரசியல் பெரும் தடையாக மாறி இருக்கிறதாம்.
இதனால் கடும் அதிர்ச்சியில் விஜய் இருக்கிறாராம். என்ன செய்வது என்று தெரியாமல் தனக்கு நெருக்கமான நபர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறாராம் விஜய். விஜய்க்கு கடந்த காலங்களில் இது போன்று ஒரு பிரச்சனை உண்டான போது அவரது தந்தை SAC உடன் இருந்து பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைத்து இருக்கிறார்.
இப்போது அவரை, விஜய் புறக்கணித்த பாவம்தான் இன்று பல்வேறு விஷயங்களில் விஜய்க்கு எதிராக திரும்புகிறது என கோலிவுட் வட்டாரத்தை சேர்ந்த விஜயின் கடந்த கால சினிமா பயணங்கள் தெரிந்தவர்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்களாம்.