திருமாவளவன் பாஜகவை எதிர்ப்பதாகவும், பாஜகவிற்கு எதிராக பேசுவதாக நினைத்து மேடையில் பேசிய பேச்சு தற்போது பாஜகவிற்கு ஆதரவாக முடிந்து இருக்கிறது.
மணிப்பூர் சம்பவம் குறித்து மேடை ஒன்றில் பேசிய திருமாவளவன் அண்ணாமலையை விமர்சனம் செய்ததோடு ஆர் எஸ் பாஜக எங்கு நுழைந்தாலும் இதான் நிலைமை இவர்கள் உடனே மேற்கு வங்கத்தை பார் பிஹாரை பாரு என்பார்கள் அங்கெல்லாம் நடந்தது வேறு மனிபூரில் நடந்தது வேறு என அப்படியே பல்டி அடித்தார் திருமா?
மேலும் குறித்து வைத்து கொள்ளுங்கள் தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் இங்கும் இது போன்ற சூழல் உண்டாகும் அப்போது திருமாவளவன் இருப்பானோ இல்லையோ தெரியாது ஆனால் ஒருவன் கத்தி கொண்டு இருந்தான் என்பது மட்டும் நினைவில் இருக்கும் என கூறினார்.
மேடையில் திருமாவளவன் ஆவேசமாக பேசினாலும் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து பிரதமர் மோடி தொடங்கி அமிட்ஷா என அனைவரும் பதவி விலக வேண்டும் என திருமாவளவன் பேசி இருக்கிறார் ஆனால் ஒரு நாள் கூட வேங்கை வயல் தொடங்கி தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நடக்கும் குற்றத்திற்கு பொறுப்பு ஏற்று ஏன் முதல்வர் ஸ்டாலினையோ அல்லது அமைச்சர்களை கூட திருமாவளவன் சொல்லாதது ஏன் என கடுமையான விமர்சனத்தை பட்டியல் சமுதாய மக்களே முன் வைக்க தொடங்கி இருக்கின்றனர்.
மணிப்பூர் கண்ணுக்கு தெரிந்த திருமாவளவனுக்கு தமிழகத்தில் நடைபெறும் கொடுமைகள் கண்ணுக்கு தெரியாதா என திருமாவளவனை நோக்கிதான் விமர்சனம் எழுந்து வருகிறது.
பாஜகவை விமர்சனம் செய்வதாக நினைத்து தற்போது தன் தலையில் தானே மண்ணள்ளி போட்ட நிலைக்கு சென்று இருக்கிறார் திருமாவளவன்.