24 special

வாட்ச் பில்லை கேட்டு இப்ப நேரம் கூட பாரக்க முடியலையே...! உடன்பிறப்புகளின் கதறல் ஸ்டார்ட்...!

Annamalai,mk stalin
Annamalai,mk stalin

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார். என் மண் என் மக்கள் யாத்திரை வருகிற 28 -ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைக்கவுள்ளாா். அண்ணாமலை அவர்கள் இந்த நடைபயணத்தை தொடங்குவதற்கு முக்கிய காரணம் அவரிடம் வாட்ச் பில் கேட்கப்பட்டது தான் என்று கூறப்பட்டு இருக்கிறது.


அது மட்டுமல்லாமல் இது எல்லாத்துக்கும் காரணம், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான். ஏனென்றால் அவர்தான் முதன் முதலாக அண்ணாமலையிடம் வாயை விட்டு தங்கள் வாட்சிற்கு பில் இருக்கிறதா? என்று திமுகவை வம்பில் மாட்டி விட்டார். அப்போதே வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் ரஃபேல் வாட்ச்சுக்கு தங்களிடம் பில் இருக்கிறதா? அவ்வளவு பெரிய பணக்காரரா நீங்கள்? நியாயமான முறையில் நீங்கள் சம்பாதித்த அதை வாங்குவீர்களா? என்பது தொடர்பான பல்வேறு குளறுபடியான கேள்விகளை அண்ணாமலை வசம் முன் வைத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ரஃபேல் வாட்ச்சுக்கு என்னிடம் தகுத முறையில் பில் இருக்கிறது. அதை என்னுடைய சுய சம்பாத்தியத்தில் இருந்துதான் நான் வாங்கி இருக்கிறேன். அது மட்டும் அல்லாத திமுகவை பற்றி ஊழல் பட்டியல்களை நான் வெளியிட ஆரம்பித்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்? விரைவில் அவற்றுக்கான ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் சொன்ன மாதிரி தற்பொழுது திமுக பைல்ஸ் என்ற பெயரில் ஊழல் பட்டியல் பாகம் ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. 

அதன் பிறகு அண்ணாமலை அவர்கள் பாத யாத்தரை மேற்கொள்ள இருப்பதாகவும் அன்றே அறிவித்து இருந்தார். மேலும் அண்ணாமலை அவர்களிடம் இதுபற்றி பின்னணியில் விசாரித்த பொழுது, "நான் இதுவரை அரசு பணிகளில் இருந்து என்னுடைய சுய சம்பாத்தியத்தில் வந்த பணத்திலிருந்து தான் இந்த வாட்சை வாங்கி இருக்கிறேன், யாருடைய ஊழல் பணத்திலோ இல்ல லஞ்ச பணத்திலோ இவற்றை வாங்கவில்லை. அரசு பணியில் இருந்த பொழுது, பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தும், விவசாயம் செய்தும், ஆடு- மாடு மேய்த்தும் என பல்வேறு வேலைகளை நான் செய்து வந்தது இவர்களுக்கு தெரியுமா? என்ன தைரியத்தில் என்னை மக்களிடம் தவறாக காட்டுவதற்கு இவர்கள் முயற்சிக்கிறார்கள்.

என்னிடம் ரஃபேல் வாட்ச் பில் கேட்பதற்கு இவர்கள் முதலில் ஒழுங்கா? இவர்கள் யாவரும் ஒழுங்கு கிடையாது. இவர்கள் ஏன் என்னிடம் வந்து வாட்ச் பில் கேட்கிறார்கள். இருந்தாலும் நான் உழைத்து சம்பாதித்த பணத்தில்தான் நான் இவற்றை வாங்கி கட்டி இருக்கிறேன்" என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அண்ணாமலை அவர்கள் பில்லையும் வெளியிட்டு இருந்தார். எனவே என் மண் என் மக்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று தீவிரமாக களம் இறங்கியதற்கு பிள்ளையார் சுழி போட்டதே இந்த வாட்ச் தான் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு வாட்ச் பில் பிரச்சனையை கேட்டு அறிவாலய வட்டாரங்கள் தற்பொழுது திகைத்து நிற்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியிருக்கிறார்கள்.