தமிழகத்தில் இளைஞர்கள் பலர் பாஜகவை நோக்கி சென்று வருவதும் இளைஞர்கள் தெளிவாக தமிழக அரசியலை கவனித்து வருவதும் கல்லூரி மாணவன் கேட்ட 4 கேள்வி மூலம் தெளிவாக தெரிய தொடங்கி இருப்பதுடன் என்னடா இளைஞர்கள் வரை விஷயம் போயிருச்சா என அதிர்ந்து கிடக்கின்றனர் ஆளும் கட்சியினரான திமுகவினர்.
ஏன் சார் 1 லட்சம் கிலோ மீட்டருக்கு அந்த பக்கம் இருக்கும் மனிபூருக்கு இந்த கனிமொழி அக்கா போராட்டம் நடத்துறாங்க இந்த பக்கத்துல சைதாப்பேட்டையில் பட்ட பகலில் பெண்ணிற்கு நடந்த கொடுமைக்கு வாய் திறக்கல, சரி என் வயது இருக்கும் கல்லூரி மாணவி விஸ்ணு பிரியாவிற்கு நடந்த சம்பவம் குறித்து ஏன் கனிமொழியோ திமுகவோ வாய் திறக்கவில்லை சொல்லுங்க என நெற்றி பொட்டில் அடித்தது போன்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அட அதோடு நிறுத்துவார் என்று பார்த்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் 1000 ரூபாய் என்று சொன்னார்கள் இன்று என்ன நடக்குது என்ன தகுதி பார்த்து கொடுக்கிறார்கள் எல்லாம் நாடகம் சார், தமிழகத்தில் பாஜக 4000 இடத்தில் போராட்டம் நடத்தியது அதை திசை திருப்ப இது போன்ற நாடகத்தை பண்ணி கொண்டு இருக்கிறார்கள்.
ஒன்று மட்டும்நிச்சயம் 2024-ல் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் அதே நேரத்தில் 2026-ல் அண்ணாமலை முதல்வராக வருவார் என கல்லூரி மாணவர் அடித்து கூறி இருக்கிறார் மேலும் எனக்கு தற்போது பாஜக மீது ஈர்ப்பு வந்து நான் பாஜகவில் இணைந்து இருப்பதாகவும் இனி தமிழகத்தில் இளைஞர்கள் பாஜக நோக்கி செல்வார்கள் எனவும் அடித்து கூறி இருக்கிறார் கல்லூரி மாணவர்.
இளைஞர்கள் தற்போது பாஜக நோக்கி செல்வதும் ஒட்டு மொத்த அரசியலை தெளிவாக கற்று வைத்து இருப்பதும் ஆளும் கட்சியான திமுகவிற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த திமுக கூட்டணிக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.