தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக அதிரடி நிகழ்வுகள் அறங்கேரி வருகின்றன, பிரதமர் மோடி தொடங்கி உள்துறை அமைச்சர்கள் என தமிழகம் வந்து சென்றுள்ளனர் இது அரசியலில் ஒரு புறம் தாக்கத்தை உண்டாக்கிய நிலையில், பிரதமர் வருகையை அடுத்து சில சம்பவங்கள் சத்தமில்லாமல் ஊடகங்களின் கவனத்தை பெறாமல் சென்றுள்ளன
அதில் ஒன்றுதான் மேயர் பிரியா வாங்கிய டோஸ்.....சென்னையின் முதல் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் மேயர் என்ற அடையாளம் பிரியா மீது விழ இயல்பாகவே பிரியா ஊடகங்களில் முன்னிலை பெற்றார்.
இந்த நிலையில் எந்த ஊடகத்தால் பிரியா வெளிச்சம் பெற்றாரோ அதே ஊடகத்தால் பெரும் சிக்கலில் சிக்கி இருக்கிறார் பிரியா, தொடர்ச்சியாக மேயர் பிரியா கொடுக்கும் பிரஸ் மீட் சம்பவங்கள் அவரை பெரும் சர்ச்சையில் சிக்கவைத்து விடுகிறது, ட்ரெயின் பெய்கிறது என பிரியா பேசிய வீடியோக்கள் இணையத்தில் கிண்டலுக்கு உள்ளான நிலையில் அவர் அது போன்று பேசுவதை மாற்றி கொண்டார்.
இந்த சூழலில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியது பிரியாவின் செய்தியாளர் சந்திப்பு மழை நீர் பாதிப்பு நடைமுறைகள் குறித்து செய்தியாளர்களை பிரியா சந்திக்க அப்போது அருகில் இருந்த அமைச்சர் சேகர் பாபு ஏதாவது அடித்து விடு என கூறியது பெரும் சர்ச்சையை ஊடகத்தில் உண்டாக்கியது.
இந்த நிலையில் மழை நீர் பாதிப்புகளை ஆய்வு செய்ய பிரியா சென்னையில் முகலிவாக்கம் பகுதிக்கு சென்ற நிலையில் அவரை சூழந்து பலரும் உடனடியாக நிவாரண உதவிகள் வேண்டும் என குரல் கொடுக்க அடுத்த தலைவலியில் சிக்கினார் பிரியா.
அமைச்சர் சேகர் பாபு மேயர் பிரியாவிடம் ஏதாவது அடித்துவிடு என பேசியதை முன்வைத்து பாஜக தலைவர் அண்ணாமலையும் கடுமையாக மேடையில் விமர்சனம் செய்தார். இது பொதுமக்கள் மத்தியில் பெரிதும் தாக்கத்தை உண்டாக்க மேயர் பிரியாவிற்கு திமுக தலைமை வாய் மொழி உத்தரவு போட்டு இருக்கிறதாம்.
ஊடகங்களை சந்தித்தால் முன் கூட்டியே தரவுகளை தயார் செய்துவிட்டு சந்திக்க வேண்டும் எனவும், தெளிவாக ஊடகங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கொடுக்க முடிந்தால் அந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் இல்லை என்றால் என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதை மட்டும் ஊடகங்களில் சொல்லிவிட்டு கடந்து செல்லுங்கள் என மேயர் பிரியாவின் உறவினர் மூலம் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மழை நீர் பணிகள் வரும் நாட்களில் எது போன்ற தாக்கத்தை உண்டாக்க போகிறதோ என அதிர்ச்சியில் ஆளும் கட்சி இருக்கும் சூழலில் மறுபுறம் மேயர் பிரியா கொடுக்கும் செய்தியாளர் சந்திப்பு புது தலைவலியை உண்டாக்கும் என்பதால் வாயை மூடி அமைதியாக இருக்க தலைமை அறிவுறுத்தி இருப்பது சரியான நடவடிக்கை என சீனியர் உடன் பிறப்புகளும் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்களாம்.