தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய சம்பவம் இளம் கால்பந்து வீரன்கனை பிரியா மரணம் இந்த மரணம் முழுக்க முழுக்க அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உண்டானது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை அரசிற்கு எதிராக எந்த சமூக ஆர்வலர்கள் நடிகர்கள் வாய் திறக்கவில்லை.
குறிப்பாக மத்திய அரசின் திட்டம் என்றால் குடும்பம் குடும்பமாக வந்து வாய் திறப்பவர்கள் நடிகர் சிவகுமார் தொடங்கி, சூர்யா, கார்த்திக், ஜோதிகா என அனைவரும் பல சமூக பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த சூழலில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக ஒரு இளம் வீராங்கனை உயிர் கொல்லப்பட்டு இருப்பது மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கும் சூழலில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் ஒருவர் கூட இது வரை வாய் திறக்காதது சாமானிய மக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்து இளைஞர்கள் சிலர் சூர்யாவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உயிர் இழந்த விளையாட்டு வீராங்கனை பிரியாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், தவறு செய்த மருத்துவர்களை பணி நீக்கம் செய்யவேண்டும் எனவும் குறிப்பாக சூர்யா ஜெய்பீம் படத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கேட்பது போல், நீதி கேட்டு இறங்க வேண்டும் என கோரிக்கை வைக்க தொடர்பு கொண்டு இருக்கிறார்களாம்.
ஆனால் சூர்யா குடும்பமே போனை எடுக்கவில்லை என உயிர் இழந்த பிரியா வட்டாரங்கள் வேதனை தெரிவிக்கின்றன, எங்கோ காஸ்மீர், குஜராத் மாநிலத்தில் ஒரு பிரச்சனை என்றால் சமூக நீதி பேசும் நடிகர்கள், இயக்குனர்கள், சமூக ஆர்வலர்கள் நம் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழச்சி பிரியா மறைவிற்கு வாய் திறக்காமல் அமைதியாக வேடிக்கை பார்ப்பது ஏன் எனவும் ஆவேசமாக குரல் எழுப்புகின்றனர் பிரியாவின் நண்பர்கள்.
மொத்தத்தில் பாஜக ஆளும் மாநிலத்தில் ஒரு சிறு பிரச்சனை என்றால் வாய் திறக்கும் நடிகர்கள் சூர்யா உட்பட திரை துறையினர், பிரியா போன்ற வீரர்கள் மரணத்திற்கு வாய் திறக்காமல் இருப்பது பலரது உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.