24 special

மாப்பிளை எடுத்த ரகசிய சர்வே.. விசிகவை விரட்டும் அறிவாலயம்,, என்ன இப்படி ஆகிப்போச்சு திருமா

MKSTALIN,THIRUMAVALAVAN
MKSTALIN,THIRUMAVALAVAN

‘கூடுதல் சீட், அதிகாரப் பகிர்வு’ என காங்கிரஸார் அடுத்தடுத்து குண்டு வீசிவரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் தங்கள் பங்குக்கு அதிக சீட்டுகள் கேட்டு கலகக்குரல் எழுப்பிவருவது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது!2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் வி.சி.க-வுக்கு ஆறு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வருத்தமே அவர்களிடம் இன்னும் தீராத நிலையில், தி.மு.க கூட்டணிக்குள் காங்கிரஸ் பற்றவைத்த ‘கூடுதல் சீட் எனும் நெருப்பு, வி.சி.க-வுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்! “2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, விசிகவுக்கு வெறும் 6 தொகுதிகளைக் கொடுத்து அப்பட்டமாகப் பாரபட்சம் காட்டியது தி.மு.க. சொல்லப்போனால் தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் ஏமாற்றப்பட்டது . 


இந்த நிலையில், ‘விஜய்யுடன் கூட்டணிக்குப் போவோம்’, ‘கூடுதல் சீட் வேண்டும்’ என்ற பேர அரசியலை, காங்கிரஸ் பொதுவெளியில் செய்துவருவது ஒட்டுமொத்தக் கூட்டணிக்கே ஆபத்தானது. தொண்டர்களே இல்லாமல், வெறுமனே தலைவர்களை மட்டுமே கொண்டிருக்கும் காங்கிரஸ், இன்னமும் கூடுதல் சீட் வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு இந்த ஐந்தாண்டுகளில் செய்த சாதனைதான் என்ன?

மாவட்டம் முழுமைக்குமே ஒரு ஆம்னி பஸ்ஸில் ஏற்றும் எண்ணிக்கையிலான நிர்வாகிகளை மட்டுமே வைத்துக்கொண்டு, கூட்டணிக்குள் தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்துகிறார்கள். ‘விஜய்யுடன் கூட்டணிக்குப் போவோம்’ என காங்கிரஸ் காட்டும் பூச்சாண்டிக்கு பயந்து, கடந்த தேர்தலைப்போலவே இந்த முறையும் காங்கிரஸுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு விடுதலை சிறுத்தைகளை அவமதித்தால்,தி.மு.க-மீது  வெறுப்படைந்துவிடுவார்கள். கட்சிக்கொடி ஏற்ற முடியாது... கூட்டம் நடத்த முடியாது... கணிசமான எண்ணிக்கையில் சீட்டும் கிடையாது என்றால்... கட்சித் தொண்டர்களும் இதை ஏற்க மாட்டார்கள்’’என்கிறார்கள் விசிக தரப்பினர். 

“எந்தக் கட்சிக்கு, எத்தனை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது தி.மு.க-வின் முடிவு. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து காட்டப்படும் பாரபட்சத்தைச் சகித்துக்கொள்ள முடியாது. கூட்டணியில் தி.மு.க-வுக்கு அடுத்தபடியான வலிமையான கட்சி விடுதலைச் சிறுத்தைகள்தான். காங்கிரஸை விமர்சிப்பது எங்கள் நோக்கமில்லை என்றாலும், அவர்களுக்கு மக்கள் சக்தி இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். 

‘“வி.சி.க-வுக்கு இரட்டை இலக்கத் தொகுதிகள் கிடைக்கும் என்ற உறுதி கிடைத்துவிட்டால், நாங்கள் ஏன் பொதுவெளியில் பேசப்போகிறோம்... கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், எங்களுக்கும் ஒரே அளவிலான தொகுதியையும் காங்கிரஸுக்கு நான்கரை மடங்கு அதிக தொகுதிகள் கொடுப்பதையும் வி.சி.க தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள்... 25 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞரிடம் 8 தொகுதிகளைப் பெற்றது வி.சி.க. ‘எங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில்லை’ என்று எங்கள் தலைவரே வருந்துகிறார்தானே..!” என்கிறார்கள் விசிக 

இந்தநிலையில் விசிகவின் ஆட்டத்தை அடக்க பாமகவை இரண்டாக உடைத்து ராமதாஸ் டீமை  திமுகவுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். , மேலும் ஸ்டாலின்  விசிகவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பல அமைச்சர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாம். சில தொகுதிகளுக்கு ஆசைப்பட்டு பல தொகுதிகளை இழப்பதற்கு நீங்கள் தயாரா என கேட்டு வருகிறார்களாம். பல இடஙக்ளில் விசிக பேசும் பேச்சுக்கள் அனைத்தும் அம்பு போல் நம்மை நோக்கி வந்து தாக்குகிறது. வக்கீல்களை தாக்குவது ஸ்ரீதர் வேம்பு போன்றவர்களை தரக்குறைவாக பேசுவது கட்டபஞ்சாயத்து செய்வது எல்லாம் திமுகவுக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. நாம் விசிகவை கழட்டி விட்டாலும் அவர்களால் எங்கும் செல்ல முடியாது விஜய் ஏற்கனவே விசிக சீமான் ஓட்டுக்களை பிரித்துவிட்டார். இதனால் விசிகவால் பெரிய அளவில் இந்த முறை சோபிக்க முடியாது என சர்வே ரிப்போட்டுகளும் முதல்வர் டேபிளுக்கு சென்றுள்ளதாம் 

இதனை அறிந்து கொண்ட“வி.சி.க அடுத்த பிளானை கையில் எடுத்துள்ளது காங்கிரஸ் பெருசா நாங்க பெருசா என அறிவாலயத்தில் குண்டை தொக்கி போட்டுள்ளது. இனி, கூட்டணிக்குள் குலவைச் சத்தம் அதிகரிக்கும்!