நடிகர் மாரிமுத்து மறைவிற்கு முன்னர் பிரதமர் மோடி குறித்து பேசியதும் பிரதமர் மோடி குறித்த தனது கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இயக்குநரும், குணசித்திர நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். சீரியல் டப்பிங்கின் போது, மாரிமுத்துவுக்கு மயக்கம் ஏற்பட்டதாகவும், உடன் பணியாற்றுபவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தனியார் தொலைக்காட்சியில் அவர் நடித்துக் கொண்டு இருந்த சீரியல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பலரும் மாரிமுத்து குறித்த தங்கள் அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர், அதில் பிரதமர் மோடி குறித்து மாரிமுத்து அழுத்தம் திருத்தமாக தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.இந்தியாவிற்கு கிடைத்த சிறந்த பிரதமர் மோடி, அவர் எடுத்த முடிவை சாதித்த நபர் சார் மோடி டிஜிட்டல் இந்தியாவை மாற்றுவேன் என சொன்னாரு செஞ்சு காட்டிடாரு பார்த்தீங்களா? இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின்னர் யாராவது மோடி போன்று செயல்படுத்து இருக்கிறீர்களா? சொல்லுங்க?அவர் 2000 ரூபாய் நோட்டை நீக்கியது ஒரு விபத்து அதை உடனே சரி செய்தார் சிறந்த பிரதமர் என்றால் அது மோடி தான் நான் எல்லா கட்சிக்கும் மாறி மாறி ஓட்டு போட்டு இருக்கேன் அவர் மாதிரி சாதனை செய்தவர் யாரும் இல்லை என நடிகர் மாரி முத்து பேட்டி அளித்துள்ளார்.மாரிமுத்து இறக்கும் முன்னர் கொடுத்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.