தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை நாளுக்கு நாள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறைப்பாக பயணப்படும் ஊர்களில் உள்ள மக்கள் பிரச்சனைகளை அவர் எடுத்துக் கூறும் விதம் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.விருது நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள், அரசியல் மாற்றத்திற்கான அடித்தளத்தை உறுதியாக அறிவிக்கும் எண்ணத்தை தெரிவிக்க, எண்ணிக்கையிலும் பெரிய அளவிலே பெரும் திரளாகக் கூடி வந்து ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் மத்தியிலே நடந்து செல்லும் போது, எனக்கும் அதே நம்பிக்கை பிறந்தது என என் மண் என் மக்கள் யாத்திரை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.பாரதப் பிரதமர் மோடி, உலகளாவிய விஷயங்களை மட்டும் செய்து கொண்டிருக்கவில்லை. 'vocal for local' என்று உள்ளூர் பொருளாதாரத்தை, நாட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் உயர்த்திக் கொண்டிருக்கிறார். ஸ்ரீவில்லிபுத்துாரின்பால்கோவாவிற்கு கூட புவிசார் குறியீட்டை பெற்றுத் தந்தவர் அவர். தமிழகத்தில், 30 மாதங்களாக, ஒற்றை குடும்பத்தின் வளர்ச்சிக்கான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் தினமும் கொலைகள்,- கொள்ளைகள், டாஸ்மாக் வியாபாரம், கஞ்சா, ரவுடியிசம், அதிகார அத்துமீறல்கள், ஊழல் பிரச்னை என, சீர்கேடுகளால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.இந்த சமூக அவலங்களை எல்லாம் ஒழிப்பீர்களா என்று மக்கள் கேட்ட போது, கோபாலபுரத்து கோமான் உதயநிதி சொல்கிறார், 'நாங்கள் சனாதன தர்மத்தை ஒழிப்போம்' என்று. 'சனாதனம் சொல்வதை போல, ஒருவன் பிறப்பால் உயர்ந்தவன் ஆகி விட முடியாது' என்கிறார் உதயநிதி; மிக்க மகிழ்ச்சி. நீங்கள் ஒருவேளை கோபாலபுரத்து குடும்பத்தில் பிறக்காது இருந்தால், இன்றைக்கு அமைச்சராக ஆகியிருக்க முடியுமா? மூத்த அமைச்சர்கள் எல்லாம் கூட, உங்களுக்கு சட்டசபையில் பாராட்டு மழைகளை பொழிவது எதனால்?சனாதனத்தை பேசுவதற்கு முன், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பதற்கு முன், கோடிக்கணக்கான ரூபாய்களை கொண்டிருக்கும் தி.மு.க., அறக்கட்டளைக்கும், உங்கள் கட்சிக்கும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக அமர்த்தி, பெருமைப்படுத்த வேண்டுகிறேன்.
எந்தக் கேள்வி கேட்டாலும், 'நீங்க சொல்லுங்க... நீங்க செய்யுங்க...' என்று சமாளிப்பதாக நினைத்து, பதில் சொல்வீர்கள். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை, நாட்டின் ஜனாதிபதியாக பா.ஜ., தான் பதவியில் அமர்த்தியது. நாங்கள் செய்து விட்டோம்; நீங்கள் செய்து காட்டுங்கள். அதன்பின், ஹிந்து மதத்தை ஒழிப்பதை பற்றி நீங்கள் யோசிக்கலாம்.நடைபயணத்தின் போது, பெருந்திரளாக ஒவ்வொரு ஊரிலும் கூடுபவர்கள், காசுக்காக வருபவர்கள் அல்ல. தொழில் பயிற்சிக் கல்லுாரியிலும், கலைக் கல்லுாரியிலும் பயிலும் மாணவர்கள் திரண்டு வருகின்றனர்.இனிவரும் தேர்தலில் அதிகாரத்தை நிர்ணயிக்கப்போகிறவர்கள் எல்லாம்,முதல் தலைமுறை இளம் வாக்காளர்கள் மட்டுமே.தி.மு.க.,வின் வார்த்தை ஜாலங்களுக்கும், அட்டைக்கத்தி அரசியலுக்கும், சிந்திக்கத் தெரிந்த புதிய வாக்காளர்கள், இனி உங்கள் மகுடிக்கெல்லாம் மயங்க மாட்டார்கள்.
கிறிஸ்தவ சகோதரர்களின் விழாவில் சென்று, தன்னை ஒரு கிறிஸ்தவனாக அறிவித்துக் கொள்ளும் உதயநிதி, 'நம் ஊரைக் காக்கும் காவல் தெய்வங்களை எல்லாம் ஒழிப்பேன்' என்பது கண்டனத்திற்குரியது; கண்டிக்கத்தக்கது.'சனாதன தர்மத்தை ஒழிப்பேன்' என்ற வாக்குறுதியோடு, உதயநிதி தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறாரா? ஆனால், அந்த வாக்குறுதி 'நீட்' ஒழிப்பு ரகசியம் போல ஆகிவிடக் கூடாது.தேர்தல் நேரத்தில் மட்டும் கையில் வேலையும், நெற்றியில் திருநீரையும் பூசிக்கொண்டு, வாக்காளர்களை ஏமாற்ற போலி வேடம் காட்டும் நீங்கள், சனாதனத்தை தேர்தலில் எதிர்க்கத் துணிந்தால், சனாதனத்திற்கான ஆதரவு முழக்கத்தோடு, நாங்களும் களம் காண தயாராக இருக்கிறோம்.தி.மு.க., ஆட்சியிலே, ராஜபாளையம் ரயில் மேம்பால பணிகள் முடிக்கப்படும் என்ற வாக்குறுதியை, இன்னமும் நிறைவேற்றவில்லைஇங்கே நகராட்சியின் சொத்து வரிகள் மிக அதிகம்
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெறாமல், மக்களுக்கு நீண்ட துன்பமாக தொடர்கிறது மகளிருக்கான அரசு கலைக் கல்லுாரி, தி.மு.க.,வின் வாக்குறுதிபடி அமைக்கப்படவில்லைசாலைகளும் மிக மோசம். மணல் கொள்ளை தவிர, இந்த தொகுதி எம்.எல்.ஏ.,தங்கபாண்டியன் சிறப்பாக வேறு எதையும் செய்யவில்லை.தமிழகத்தின் அரசு சின்னமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஸ்ரீவில்லிபுத்துார் கோபுரம் அமைந்துள்ள, சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் நாச்சியார் கொண்டிருக்கும் மண்ணில், சனாதனத்தின் வழி சாத்வீகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் மகாஜனங்கள் அத்தனை பேரும், தலைவர் மோடியின் கரத்தை வலுப்படுத்தி, மூன்றாம் முறை அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவர் என்று ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய ஊர்களில் நடந்த நடைபயணமும் உணர்த்தியது என்று கூறியுள்ளார்.
பெரும்திரளான மக்கள் இந்த யாத்திரையில் பங்கேற்பது, அண்ணாமலை கூறியது போல, ஜனவரி மாதம் யாத்திரை முடியும் போது திமுகவின் முகத்திரை முழுவதுமாக கிழித்தெறியப்பட்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது என்று மூத்த அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இதில் கவனிக்க வேண்டிய விஷயமே அண்ணாமலையை பெரும்பாலான மக்கள் கருணாநிதியை டாப் என்று கூறியதைத்தான். கருணாநிதி புறநானூறு அகநானூறு இலக்கியம் எனப்பேசி தன் பேச்சாற்றலால் மக்களை கவர்ந்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அண்ணாமலையோ மக்களோடு மக்களாக, அப்பகுதி மக்களின் பிரச்சனைகளை அறிந்து வெற்றுப்பேச்சுடன் நின்றுவிடாமல் அதற்கான தீர்வையும் காட்டுகிறார். கருணாநிதியை ஒப்பிட்டால் அண்ணாமலைதான் பெஸ்ட். மக்களுக்கான எதிர்காலத் தலைவர் என கூறுகின்றனர்.