கோவிலை பூட்டிய உங்களால் எங்கள் மசூதி அல்லது கிறிஸ்தவ சர்ச் போன்றவற்றை மூட முடியுமா இந்துக்கள் பாவம் கிராம கோவில்கள் என்பது எத்தனை சந்தோஷமான நிகழ்வு அந்த கோவிலை பூட்ட உங்களுக்கு எப்படி மனது வந்தது, இதுதான் திராவிட மாடலா என ஒரு இஸ்லாமியர் எழுப்பி இருக்கும் கேள்வி பெரும் அதிர்ச்சியை ஆளும் அரசிற்கு கொடுத்து இருக்கிறது.
மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில் மூடி சீல் வைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், அதில் சலீம் என்பவர் எழுப்பிய கேள்வியில் இஸ்லாமிய மதத்தில் கூட பிரிவினை இருக்கிறது அதற்காக மசூதியை இது வரை பூட்டி இருக்கிறீர்களா பாவம் இந்துக்கள் இதற்காகவா? உங்களுக்கு ஒட்டு போட்டார்கள் என வெளுத்து எடுத்து இருக்கிறார்.
இஸ்லாமியர் ஒருவரே நேரடியாக கோவில்கள் மூடப்பட்ட நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து ஆளும் கட்சிக்கு எதிராக கருத்து பதிவு செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.