24 special

சென்னைக்கு சுற்றுலாவிற்கு வருபவர்களுக்கு இந்த நிலைமையா???

Chennai
Chennai

உலகின் பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு சென்று  வர வேண்டும் என்பது அனைவரின் ஆசையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு வருபவர்கள் குறிப்பாக சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்று அதிக அளவில் ஆசை கொண்டு உள்ளனர். பிற மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாவிற்கு வருபவர்களிடம் விற்கப்படும் பொருளுக்கு அதிக விலையில் விற்பதை நாம் பார்த்திருப்போம். அதுவே உள்ளூரில் இருப்பவர்கள் அதே பொருளுக்கு  குறைவான விலையை கொடுத்து வாங்குவதையும் நாம் பார்த்திருப்போம். 


இவ்வாறு தொடர்ந்து  பல இடங்களில் பொருட்கள் அதிக விலையை வைத்து விற்று வந்தனர். சுற்றுலா செல்லும் இடங்களில் விற்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் சுற்றுலா வருபவர்களுக்கு இருப்பதால் அவர்களும் விலை அதிகம் வைத்து விற்பதை மறுக்காமல் வாங்கி விடுவார்கள். இவ்வாறு தொடர்ந்து பொருட்களை மட்டுமே இதுபோன்று ஏமாற்றி விற்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மற்றொரு விஷயத்திற்கும் அதிக விலை வைத்து ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது. அது குறித்து விரிவாக காணலாம்!!

சென்னைக்கு சுற்றுலாவிற்காக தெலுங்கானாவில் இருந்து 10 பேர் கொண்ட கும்பல் வேன் ஒன்றில் வந்துள்ளது. அவ்வாறு அவர்கள் மெரினா கடற்கரையை வந்தடைந்த பொழுது வேன்னை நிறுத்திவிட்டு அருகில் இருக்கும் கடைக்கு சென்று டீ குடித்து வரலாம் என்று வாகனத்தை நிறுத்தியுள்ளனர். வாகனத்தை நிறுத்தி விட்டு சென்று பத்து நிமிடமே ஆன நிலையில் ஸ்மார்ட் பார்க்கிங் என்ற பெயரில் வாகனத்தை நிறுத்தியதற்காக 300 ரூபாய் கட்டணம் வசூலிப்பதற்காக ஐந்து பேர் கொண்ட கும்பல் வேனிற்கு முன்னால் நின்று அடாவடியாக பணம் கேட்டதாகவும், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொழுது  வேன் டிரைவரை தரம் வாரியாக தாக்கி ரத்தம் வரும் அளவிற்கு அடித்துள்ளனர். இந்த நிலையில் அங்கு விரைந்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தும் பொழுது  மழை திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால்..

ஸ்மார்ட் பார்க்கிங் என்ற பெயரில் மெரினாவிற்கு வரும் வாகனங்களிடம் தனியார் நிறுவனம் ஒன்று குத்தகை எடுத்து நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வருவதாகவும், அவர் கட்டணங்களை வசூலிப்பதற்காக அடாவடியான ஆட்களை வேலைக்கு வைத்திருப்பதாகவும் தெரிய வருகிறது. இந்த நிலையில் தற்போது கட்டணம் வசூலிக்கும் நிறுவனத்தின் குத்தகையானது காலாவதியாகி ஒரு மாதமான நிலையில் இன்னும் அதனை புதுப்பிக்காமல் இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது. அது குறித்து விசாரணை நடத்தும் பொழுது  தேர்தல் முடிவுகள் வருவதற்காக காத்திருப்பதாகவும், அதனால்தான் இன்னும் புதுப்பிக்காமல் இருப்பதாகவும் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். 

பொதுவாக இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. 5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10 என வசலிப்பது மாறி இவர்கள் மட்டும் 60 ரூபாய் வரை வசூலித்து வந்துள்ளது தெரியவருகிறது. குறிப்பாக வெளியூரிலிருந்து வருபவர்களிடம் அதிக பணம் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகிறது. இதன் உரிமையாளர் யார் என்று வேலை செய்பவரிடம் விசாரித்தும் அவர் உண்மையை கூறாத நிலையில் வசூல் ஆகும் பணத்தினை 10 மணிக்கு மேல் ஒருவர் வந்து வாங்கி செல்வதாக கூறியுள்ளனர். 

இதைத்தொடர்ந்து டிஜிட்டல் பேமென்ட் முறையில் கட்டணம் வசூலிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து அதன் மூலம் உரிமையாளரை தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கும் பொழுது அந்த க்யூ ஆர் கோடானது வேலை செய்பவர்களின் சொந்த வங்கி கணக்கிறியது என தெரியவந்துள்ளது. மாநகராட்சி வசூலிக்கும் கட்டணத்தில் தனது சொந்த அக்கவுண்டில் வாங்கிக் கொள்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!! இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றி வரும் கும்பலிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் கூறி வருகின்றனர். தற்போது இது குறித்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது!!