24 special

பத்து சதவிகிதத்தை தாண்டிய பாஜக வாக்கு எண்ணிக்கை.. உடனடியாக அண்ணாமலைக்கு வந்த டெல்லி அழைப்பு...

BJP
BJP

இந்திய அரசியலில் இன்று மிகவும் முக்கியமான நாள்! இந்த நாளுக்காகவே அனைத்து கட்சிகளும் ஒன்றை மாதங்களாக காத்துக் கொண்டிருந்தது. கடந்த ஜூன் ஒன்றாம் தேதியுடன் லோக்சபா தேர்தலில் ஏழு கட்ட வாக்குப்பதிவுகளும் முடிந்து வாக்குப்பதிவுகளுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக வெளியானது. ஆனால் இதற்கு கருத்துக்கணிப்பிற்கு எதிரான முடிவுகள் கூட வரலாம் என்ற வகையில் காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி பல விமர்சனங்களையும் கருத்துக்களையும் கூறி வந்த நிலையில் கருத்துக்கணிப்பில் கூறியது தற்போது நிஜமாகி வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைகள் தொடங்கியதில் இருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.


உத்திரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி 3,06,319 வாக்குகளுடன் முன்னிலை வகுத்து வருகிறார், அமித்ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் 5,82,216 வாக்குகளுடனும், இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூர் தொகுதியில் அனுராக் தாகூர் 4,99,895 வாக்குகளுடனும்,  திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளர் ராஜு சந்திரசேகர் 2,33,362 வாக்குகளுடனும், உத்திரபிரதேசத்தில் லக்னோ தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜநாத் சிங் 1,50,494 வாக்குகளுடனும், இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில்  கங்கனா ரனாவத் 4,60,556 வாக்குகளுடனும் பாஜகவின் ஸ்டார் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். 

மேலும் மகாராஷ்டிராவில் நிதின் கட்கரி, மகாராஷ்டிராவின் வடக்கு மும்பை தொகுதியில் பியூஸ் கோயல், உத்திர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் ஹேமா மாலினி, கர்நாடகாவின் பெங்களூர் தெற்கு தொகுதியில் தேஜஸ்வி சூர்யா, ராஜஸ்தானின் அல்வர் தொகுதியில் பூபேந்திர யாதவ், கேரளாவின் திருச்சூர் தொகுதியில் சுரேஷ்கோபி உள்ளிட்ட பலரும் முன்னிலையில் உள்ளனர். இதைத் தவிர ஒடிசா சட்டமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியையும் பெற்றுள்ளது. மேலும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக தனது வெற்றியை பதிந்து வருகிறது. மேலும் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று 290 க்கும் மேற்பட்ட தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். 

அதுமட்டுமின்றி, இதுவரை தமிழகத்தில் அதிமுக உடனான கூட்டணியில் தேர்தல்களை எதிர்கொண்டு வந்த பாஜக 20204 லோக் சபா தேர்தலை தனித்து எதிர்கொண்டது அதிலும் பாஜக தலைமையிலான சில கட்சிகளின் கூட்டணியிலேயே இந்த தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் பரபரப்புகள் அனைத்தும் சிறப்பாகவும் திறம்படவும் நடைபெற்ற நிலையில் இதற்கு முன்பு பாஜக கண்டிராத பல வாக்கு எண்ணிக்கைகளை தற்போது தன்வசமாகியுள்ளது. இருப்பினும் கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரண்டாம் நிலையிலேயே உள்ளதால் தமிழக பாஜகவினிடையே சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதனை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அழைத்து, தமிழகத்தில் வெற்றி பெறாவிட்டாலும் முந்தைய ஆண்டுகளை விட தற்போது நாம் கண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையானது அபரிவிதமாக உள்ளது. இதனையே தொடர்ச்சியாக நாம் மேற்கொண்டு 2026 இல் ஆட்சியை பிடிப்போம் தைரியத்துடன் இருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு இலக்க எண்ணாக இருந்த நம் வாக்கு சதவிகிதமானது தற்பொழுது இரண்டு இலக்கை எண்ணை அடைந்துள்ளது 10 முதல் 15 சதவீதமாக பாஜகவின் வாக்கு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதனால் இது நல்ல முன்னேற்றம் ஜெயிக்கவில்லை என்று வருத்தப்பட வேண்டாம்!! அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கி....இனி அடுத்து நம் இலக்கு 2026 தான் என அண்ணாமலைக்கு பிரதமர் மோடி உத்வேகம் அளித்துள்ளார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.