தர்மபுரி மாவட்டம் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை அதிக விபத்துகளை சந்திக்கின்ற ஒரு நெடுஞ்சாலை! ஏனென்றால் இந்த நெடுஞ்சாலையானது சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் தினந்தோறும் இந்த சாலை வழியாக பல கனராக வாகனங்கள் சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்த தொப்பூர் கணவாய் இரண்டு மலைப்பகுதிகளுக்கு நடுவில் அமைந்திருப்பதாலும் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் வரை இந்த சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. கர்நாடகா மகாராஷ்டிரா குஜராத் ஹைதராபாத் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் இந்த சாலை வழியாக கார்கள் கனரக வாகனங்கள் என இந்த நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் கிட்டத்தட்ட 50000 வாகனங்கள் தினமும் சென்று வருகிறது. அதனால் எப்பொழுதுமே போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த தொப்பூர் கணவாய் தமிழகத்தில் அதிக போக்குவரத்து விபத்துகள் நடக்கின்ற இடமாகவும் கருதப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணமாக தொப்பூர் கணவாய் மலைப்பகுதியில் கட்டமேடு பகுதியிலிருந்து இரட்டை பாலம் வரை தாழ்வான சாலை, அதிக வளைவுகள், தினம் தோறும் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்து என்பதால் அதிக விபத்துகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை ஒரு மாதத்தில் தொப்பூர் கணவாயில் ஏற்படுகின்ற விபத்தில் யாரும் இறக்கவில்லை என்றால் கூட மாதத்திற்கு 100 பேராவது அந்த பகுதியில் செல்லும் பொழுது காயமடைந்து வடுவதாகவும் உயிருக்கே போராடிவரும் சூழலில் தவிப்பதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இதில் மத்திய அரசு தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தி விபத்துகள் ஏற்படாத வகையிலான மேம்பட்ட போக்குவரத்து சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தையும் வேண்டிய நிதியையும் ஒதுக்கியது.
மேலும் மாவட்ட நிர்வாகமும் 19 விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் இந்த பகுதியில் ஏற்படுகின்ற விபத்துகளின் எண்ணிக்கை குறைந்ததாக இல்லை கடந்த மாதம் 25ஆம் தேதியில் கூட மாலை 5 மணி அளவில் தொப்பூர் கணவாய் ரெட்டை பாலம் அருகே சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற இரண்டு கார்கள் இரண்டு லாரிகள் மீது மோதி கோர விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்! இந்த நிலையில், நேற்று முன்தினம் தோப்பூர் கணவாய் பகுதியின் மேல் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரி ஒன்று கட்டமேடு கணவாய் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து தனக்கு முன் சென்று கொண்டிருந்த மூன்று கார்கள் மற்றும் ஒரு டாட்டா சரக்கு வாகனம் மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் பெண் உள்ளிட்ட மூன்று பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இப்படி அந்தப் பகுதியில் மக்கள் கூறியபடியே மாதம் கிட்டத்தட்ட நூறு பேராவது இந்த பகுதிகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைந்து விடுகிறார்கள் அல்லது உயிரிழந்து விடுகிறார்கள் அந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசலையும் விபத்தையும் சந்தித்து வருகிறது தொப்பூர் கணவாய். இதனை சீரமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதற்கு சில அமானுஷ்ய சக்திகளும் காரணமாக உள்ளதாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இரண்டு மலைகளுக்கு நடுவில் இந்த கனவாய் அமைந்திருப்பதால் இந்த இரண்டு மலைகளுக்கு இடையே அமாநிஷ்ய சக்திகள் நடக்கும் பொழுது இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாகவும் அதனால் இப்பகுதியில் நாங்கள் செல்வதற்கு மிகவும் பயமாக இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இருப்பினும் இதனை அறிவியலாக பார்த்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிக வளைவுகளை கொண்ட பகுதி என்பதாலும் இங்கு அதிக விபத்துகள் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.