தமிழகத்தில் தற்போது போதைப்பொருள் புழக்கமும், போதைப்பொருள் கடத்தப்படும் விவகாரமும் அதிகமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். அந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லியில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கிட்டத்தட்ட 1700 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தது. இதனை அடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தமிழகத்தில் உள்ள திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் நிர்வாகிக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் பரபரப்பாக வெளியாகி அவரை நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது மேலும் டெல்லியில் இருந்து வந்த போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சீல் வைத்துவிட்டு சென்றனர்.
ஆனால் இதுவரையிலும் அவர் தலைமறைவாகவே இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி, சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் வந்த நபர்களிடமிருந்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 30 கிலோ மொத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்துள்ளது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குஜராத் கடல் பகுதியில் இருந்து கப்பல் மூலம் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு அதில் தொடர்புடைய ஐந்து பேரையும் கைது செய்தது. இதனால் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் போதைப்பொருளின் புழக்கமும் கடத்தலும் அதிகரித்து வருவதாக கூறிய குற்றச்சாட்டு தற்போது மெல்ல மெல்ல உண்மையாக மாறி வருவது தமிழக மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லியில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட கும்பலுடன் தமிழகத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக்கிற்கு
தொடர்பு இருப்பதோடு தமிழக இயக்குனரான அமீர் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. ஏனென்றால் ஜாபர் சாதிக் மற்றும் அமீர் இருவரும் சேர்ந்து 2015 முதல் நட்பில் இருந்து வருவதாகவும் இருவரும் சேர்ந்து பல தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் விமர்சகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து NDPS சட்டத்தின் கீழ் கைதாகும் வழக்குகளின் எண்ணிகைகளை மாதம்தோறும் ஒவ்வொரு மாநிலமும் NCB பணியகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த கணக்கின் படி 163 வழக்குகள் பதிவாகியுள்ளது. NDPS சட்டத்தின் கீழ் தமிழகம் போதை ஆசாமிகளை கைது செய்யாமல் கண்துடைப்பிற்காக வழக்கு பதிவு செய்து NCB பணியகத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை? தினம்தோறும் நாளிதழ்களில் பதிவாகும் வழக்கு எண்ணிக்கைகளே மாதம்தோறும் ஆயிரக்கணக்கை தாண்டுகிறது.
போதை ஆசாமிகளை காப்பாற்றி அரசியல் பிழைப்பிற்காக தமிழகத்தை பற்றி பொய்யான பிம்பத்தை உருவாக்கி வசூல் வேட்டை நடத்துகிறாரா முதல்வர் திரு ஸ்டாலின்? என பாஜக மாநிலச் செயலாளர் எஸ் ஜி சூர்யா திமுக ஐடி விங் பதிவிட்ட தகவலுக்கு புள்ளி விவரங்களோடு பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில், திரௌபதி மற்றும் பகாசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் தனது சமூக வலைதள பக்கத்தில், Drive against drugs.. எனக்கு தெரிந்த விவரம் பகிர்ந்து கொள்கிறேன். சென்னையில் அதிகமாக போதை பொருள் குறித்த வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தை நடப்பது சென்னை ப்ராட்வே ஏரியாவில் உள்ள மேன்சன்களில் தான். ஆதாரம் கேட்டால் என்னிடம் இல்லை ஆனால் போதை பொருள் கை மாற்றும் வியாபாரம் நடப்பது நிஜம் என்று பதிவிட்டுள்ளார் மேலும் ஒரு திரைப்படத்தின் காட்சியையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதோடு தமிழகம் இன்னும் என்னென்ன குற்றங்களுக்கு தலைநகரமாக மாறப்போகிறதோ தெரியவில்லை என கமெண்ட்கள் பதிவிடப்படுகிறது.