1) சிதம்பரத்தில் சிவனடியார்கள் ஒன்று கூடி, சிவனை இழிவாக பேசிய யூடுப்பரை கண்டித்து பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர், இது தமிழகத்தில் நடைபெறாத வழக்கமான ஒன்று, வட மாநிலங்களில் முதலில் சாமியர்களிடம் ஏற்பட்ட எழுச்சியே பாஜக ஆட்சியில் அமர முக்கிய காராணிகளில் ஒன்றாக அமைந்தது, இப்போது தமிழகத்திலும் சிவனடியார்கள் ஒன்று கூடி இருப்பது ஆளும் அரசிற்கு எதிரான சிக்கல்.
2) பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு தனது வரி வருவாயை குறைந்ததன் மூலம் குறைத்து இருப்பது இந்தியா தவிர்த்து உலக நாடுகளிலும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, உக்ரன் போர் சூழலில் அனைத்து நாடுகளிலும் விலை ஏறிக்கொண்டு இருக்க இந்தியா பெட்ரோல் விலையை குறைத்தது பெரும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
ரஸ்யாவிடம் குறைந்த விலையில் பெட்ரோல் வாங்குவதால் இது சாத்தியம் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.பெட்ரோல் டீசல் விலையை மாநில அரசுகள் குறைக்கவில்லை என்றால் மிக பெரிய நெருக்கடியை சந்திக்கும் என்பது உறுதி.
3) தமிழகத்தில் சுப்பர் பவர் எதிர்க்கட்சியாக பாஜக சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து இருக்கிறது, பாஜக என்ன விவகாரத்தை முன்னெடுக்கிறதோ அதற்கு பதில் கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளும் திமுக சென்றுள்ளது.
உதாரணம் : i) தமிழக அமைச்சர்கள் பலருக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது என அண்ணாமலை குற்றசாட்டு வைக்க மறுநாளே சில அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசி ரெகார்ட் செய்து வீடியோவை வெளியிடுகின்றனர்.
ii) தமிழகத்தில் ஒரு கட்சியால் தனி நபருக்கு கட்சி ரீதியாக, வியாபார ரீதியாக பாதிப்பு என்றால் அதனை சமாளிக்க கூடிய இடத்தில் உள்ள கட்சியில் தங்களை இணைத்து கொள்வார்கள் அந்த வகையில் திமுகவால் பிரச்சனை என்றால் அதிமுகவில், அதிமுகவால் பிரச்சனை என்றால் திமுகவில் இணைத்து கொள்வார்கள் இது தான் நடக்கும் ஆனால் தமிழகத்தில் தற்போது திமுகவால் ஆபத்து என்றால் பாஜகவை நோக்கி மக்கள் மாறுகிறார்கள்.
குறிப்பு - சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் மனைவி பாஜகவில் இணைந்தது. பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த பெண் ஊராட்சி தலைவர், துணை தலைவர் தலையீட்டை சமாளிக்க பாஜகவில் இணைந்தது என முக்கிய சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. இந்த மூன்று விவகாரங்களும் எளிதில் கடந்து போக கூடியவை அல்ல. பதிவு - உதயகுமார் செந்திவேல் TNNEWS24 நிர்வாக ஆசிரியர்