24 special

அமைச்சர் என்னை தடுத்தால் அதன் பிறகு என்ன நடக்கும் அண்ணாமலை அதிரடி !

mrk.pannerselvam and annamalai
mrk.pannerselvam and annamalai

அண்ணாமலை கரூரை தாண்ட முடியாது என மிரட்டல் விடுத்த அமைச்சர் MRK.பன்னீர்செல்வத்திற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார், அமைச்சருக்கு நெஞ்சில் துணிவு இருந்தால் என்னை தடுக்கட்டும் அதன் பிறகு என்ன நடக்கும் பார்ப்பீர்கள் என அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.


மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் முயற்சியாக வரியை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது இதன் மூலம் பெட்ரோல் விலை குறைந்தது மேலும் மாநிலங்களும் தங்கள் பங்கிற்கு விலையை குறைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டு இருந்தார், இதனை தமிழக நிதி அமைச்சர் மறுத்துவிட்டார்.

இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று அறிவித்தது போல குறைக்க வேண்டும். அதுபோன்று சமையல் எரிவாயு விலையை 100 ரூபாய் குறைக்க வேண்டும். 72 மணி நேரத்திற்குள் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் பாஜக கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், அண்ணாமலை கரூரை கூட தாண்ட முடியாது என்று எச்சரித்துள்ளார்.கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயில் பகுதியில் நேற்று இரவு , திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.இதில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், "கர்நாடகாவில் இருக்கும் போது காவிரி நீரை விட கூடாது என்று சொன்ன அண்ணாமலை , தற்போது தமிழக பாஜக தலைவராக உள்ளார். இவர் தமிழகத்துக்கு என்ன செய்ய போகிறார். மத கலவரத்தை உருவாக்க பார்க்கிறார்.

இது திமுக ஆட்சி. இந்த சவாலுக்கு எல்லாம் பயப்படமாட்டோம். என்ன தைரியம் உங்களுக்கு. கர்நாடக அரசுக்கு சல்யூட் அடிக்கும் அண்ணாமலை, கரூரை கூட தாண்ட முடியாது" என்று எச்சரிக்கை விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறிய நிலையில் இது குறித்து அண்ணாமலை தெரிவித்த செய்து வைரலாகியது அமைச்சர் முடிந்தால் நேரடியாக என்னை கரூர் வந்து தடுத்து பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.

அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேசிய பேச்சிற்கு இன்று செய்தியாளர் சந்திப்பில் முறைப்படி அண்ணாமலை நேரடியாக சவால் விடுக்கலாம் என்று கூறப்படுகிறது, சொந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியே சற்று அடக்கி வாசிக்கும் நிலையில் வெளிமாவட்ட அமைச்சர் ஏன் சவால் விட்டு வம்பில் சிக்கவேண்டும் என உடன்பிறப்புகளே பேசிவருகின்றனர்.