நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாக தொடங்கி, கூட்டணி அமைக்கும் நோக்கில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணி கடந்த நாடாளுமன்ற தேர்தலை திமுக எப்படி சந்திச்சதோ அதேபோல் தபோர்த்து இந்த தேர்தலுக்கும் தயாராகியுள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி பெரியதாக எட்டப்படாத நிலையில், பாஜக நேரம் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு டிவிஸ்ட் கொடுத்துள்ளது.
அதிமுக கடந்த ஆண்டு தேசிய கட்சியான பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து தேர்தலை சந்திக்க போவதாக கூறியது. நாடளுமனற்ற தேர்தலுக்காக பாஜக அதிமுக கூட்டணியிடன் தொடர்பு கொண்டும் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து வந்தார் என்ற தகவலும் பேசப்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அப்படி யாரும் இணையவில்லை. இதனால் கூட்டணிக்கா கதவுகள் திறந்துள்ளது என்று அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் வரை அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக உள்ளிட்ட பெரிய இரண்டு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சமரசம் ஏற்படாததால், பாஜக பக்கம் தங்களது வண்டியை திருப்பியது. அங்கு தேமுதிக எதிர்பார்த்த ஒரு ராஜ்யசபா சீட் பாஜக தலைமை கொடுக்க முன்வராததால் நாங்கள் இன்னும் பாஜகவிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை துன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
இதற்கிடையில் பாமக கட்சியுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அதிமுக நடத்திய நிலையில் அவர்களும் ராஜ்யசபா சீட் கேட்டதால் அதிமுக அதனை கொடுக்கமுடியாத சூழ்நிலைக்கு சென்றது. இதனால் பாமக பாஜக டெல்லி தலைமையிடம் பேச்சுவார்த்தை தொடங்கியது. பாமகவுக்கு 7 மாநிலங்களவை தொகுதியும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக சில தகவல் வெளியானது. இதனால் அதிமுக பாமாவுக்கான கதவை முடி விட்டது என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால், இன்னும் அதிமுக தரப்பில் தேமுதிக தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்புகளை வெளியிடவுள்ளதால், தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி கட்சிகள் அதற்கான பணிகளை துரிதமாக செய்து வருகிறது. பாஜக கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகிறது. ஆனால், அதிமுக கூட்டணி பெரியதாக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், 40 தொகுதிகளிலும் அதிமுக சின்னத்தில் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. பாஜகவில் இருந்து வெளியே வனத்தில் இருந்து அதிமுகவுக்கு அபச குணம் பிடித்துவிட்டது என அரசியல் விமர்சகளால் கூறப்படுகிறது.
இதனால் பாஜக இரண்டாவது கட்சியாக தமிழகத்தில் கவனம் செலுத்தி வருகிறது என்றும், அதிமுக கூட்டணி அமைப்பதில் தொய்வு ஏற்பட்டு விட்டது என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக உடன் சமரசம் ஏற்பட்ட நிலையில் பாமக இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனை முடிந்தவுடன் கூட்டணி தொடர்பான அறிவிப்புகளை அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பாமக ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி மேற்கொண்டால் பாமகவில் விரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே பிரதமர் தமிழகம் வரும்பொழுது பாஜக கூட்டணி கட்சிகள் மேடை ஏற்ற வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. அதிமுக கூட்டணி அமையாமல் மாற்று கட்சியினர் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.