24 special

உலகிலேயே இந்த கோவிலில் மட்டுமே உள்ள அற்புத சக்தி...

PERUMAL TEMPLE
PERUMAL TEMPLE

திருச்சியில் உள்ள உறையூரில் இரண்டாவது திவ்ய தேசமான  உறையூர் அழகிய மணவாளன் கோவில், இந்த ஸ்தலம் எப்படி உருவானது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா??? ரங்கநாதர் உடைய பக்தரான நந்த சோழ மன்னன்  இந்தப் பகுதியை ஆண்டு வந்தார். அந்தக் காலத்தில் அவருக்கு புத்திர பேரு இல்லை எனவும் ரங்கநாதரிடம் வந்து தனக்கு குழந்தை பாக்கியம் தருமாறு வேண்டிக் கொண்டதாகவும் புராணத்தில் கூறப்படுகிறது. தன்னுடைய தீவிர பக்தர்காக மகாலட்சுமியை மன்னனின் மகளாக பிறப்பதற்கு அந்த ரங்கநாதரே மகாலட்சுமியை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு சமயம் நந்த சோழன் வேட்டைக்கு செல்லும் போது ஒரு குளம் போன்ற இடத்தில் ஒரு தாமரை மலரில் குழந்தை ஒன்று படுத்து கொண்டிருப்பதை பார்க்கின்றார். அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாகி அந்த குழந்தையை கையில் எடுக்கிறார். அந்தக் குழந்தைக்கு கமலவல்லி என்று பெயரும் வைத்து அதனை வளர்த்து வருகிறார். 


பின் அந்த குழந்தை வளர்ந்து பருவ நிலையை அடைந்த பொழுது தன் தோழிகளுடன் காட்டில் நடந்து கொண்டு செல்லும் பொழுது ரங்கநாதர் அந்தப் பெண்ணின் முன் குதிரையில் போகும்பொழுது அதைப் பார்த்த கமலவல்லி தாயார் அவரின் மீது காதல் வயப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றது மேலும் அவரையே திருமணம் செய்ய போவதாகவும் உறுதி எடுத்துக் கொண்டதாகவும் கூறுகின்றனர். அதன் காரணமாக நந்தன் சோழன் கனவில் தோன்றி பெருமாள் நான் கமலவள்ளியை திருமணம் செய்யப் போகின்றேன் என்று கூறியுள்ளார். அதைக் கேட்டவுடன் நந்த சோழரும் கமலவள்ளியை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துக் கொண்டு செல்கின்றார். அங்கு ரங்கநாதருடன் கமலவள்ளியும் ஐக்கியம் ஆகின்றார். கமல சோழன் உறையூரில் உள்ள கோவிலாக எழுப்பியுள்ளார் சோழன். இதுவே இந்த கோவில் உருவான விதம்!!

இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் 12 ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார் இந்தக் கோவிலில் தான் அவதரித்தார். மேலும் இந்த கோவிலில் அவருக்கென தனியாக சன்னதி ஒன்று உள்ளது. இந்தக் கோவிலில் குங்குமம் பிரசாதமாக கொடுக்கப்படுவதில்லை அதற்கு பதில் சந்தனமாக தான் கொடுக்கின்றனர். பெரும்பாலான பெருமாள் கோவில்களில் குங்குமம் தான் பிரசாதமாக கொடுப்பார் ஆனால் இந்த கோவிலில் சந்தனம் கொடுப்பது தனி சிறப்பு. கட்டடக் கலைக்கு பேர் போன சோழர்களால் கட்டப்பட்ட கோவில் இது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாள பெருமாளும் கமலவல்லி தாயாரும் திருமண கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். அதனால் திருமண தடை உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் நிச்சயமாகும் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோவில் அங்கு அமைந்துள்ள தாயார் பிறந்த இடம் என்பதால் மிகவும் சிறப்பு அதனால் இந்த கோவில் நாச்சியார் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. தாயாருக்கு படைக்கப்படும் நெய் வேத்தியத்தில் காரத்திற்காக மிளகாய் வத்தல் சேர்ப்பது கிடையாது மாறாக  மிளகு தான் சேர்க்கின்றனர் இது இந்த கோவிலின் தனி சிறப்பாகும். 

மேலும் சொர்க்கவாசல் திறக்கும் அன்று எல்லா பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசலே கடந்து வரும் வைபவம் போல் இல்லாமல் மாறாக தாயார் தான் இந்த கோவிலில் சொர்க்கவாசலை கடந்து வருவார். அது மட்டுமல்லாமல் வைகுண்ட ஏகாதேசி அன்று இந்த கோவில் சொர்க்கவாசல் திறக்கப்படாது. அதற்குப் பதிலாக மாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை ஏகாதேசி அன்று மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தாயார் மட்டும் அதனை கடந்து வருகின்றார். வைகுண்ட ஏகாதேசி அன்று கோவிலுக்கு சென்று சொர்க்கவாசலை பார்க்க முடியாதவர்கள் மாசி மாதம் சென்று இந்தக் கோவிலில் நடக்கக்கூடிய சொர்க்கவாசல் விழாவினில் கலந்து கொள்ளலாம்.ஆனால் திருமணம் ஆகாமல் உள்ளவர்கள், திருமணம் ஆகி கணவன் மனைவிக்குள் அதிகமாக சண்டை வருதல் போன்றவை இந்த கோவிலுக்கு வந்தால் சரியாகும் என்று சொல்கின்றனர். வேண்டியது நிறைவேறினால் இந்த கோவிலுக்கு வந்து தாயாருக்கு நெய் வைத்தியம் செய்து செல்கின்றனர்.