24 special

வசமாக சிக்கிய திருமாவளவன்!

thirumavalavan,dmk
thirumavalavan,dmk

அரசியல் மேடையானது சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அதன் விளைவாக சாதி அமைப்பை முடிவுக்கு கொண்டு வருவதை மையமாக வைத்து அமைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது அதன் கொள்கைகளை மறந்து விட்டதா என்ற வகையிலான கருத்துக்கள் இணையங்களில் சுற்றி வருகிறது. இதன் தலைவராக உள்ள திருமாவளவனின் தற்போது தடம் மாறிவிட்டார் உயர் பதவி மட்டுமே தனது நோக்கமாக மாற்றிக் கொண்டாரோ என்ற வகையிலும் சமூக வலைதளங்களில் திருமாவளவனுக்கு விமர்சனங்கள் குவிந்து வருகிறது. 


ஏனென்றால் கடந்த 2019ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற்ற திருமாவளவன் கடந்த மூன்று ஆண்டுகளில் திமுகவால் பல புறக்கணிப்புகளையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வந்தார், அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பங்கள் வைப்பதற்கு அவரது கூட்டணி கட்சியான திமுக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டதும் அத்துமீறி வைக்கப்பட்டுள்ளதாக சில விசிக கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டதும் அதனால் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதும் தமிழகத்தில் பரபரப்பாக நடந்த சம்பவங்கள்! அதோடு பெரும் சர்ச்சையை கிளப்பிய வேங்கைவயல் சம்பவம் முற்றிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கையை களங்கப்படுத்தும் விதமான சம்பவமாகும் அப்படிப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்திருந்த பொழுதும் அவற்றை பெருமளவில் எதிர்க்காமல் கண் துடைப்பிற்கு எதிர்ப்பதாக சில கருத்துக்களை முன்வைத்து விட்டு அதற்குப் பிறகு தனது எதிர்ப்பை தெரிவிக்க முடியாமல் ஒரு நிலைக்கு திருமாவளவன் தள்ளப்பட்டதும் அரசியல் வட்டாரம் முழுவதும் அறிந்த ஒன்று! 

இப்படி ஆளும் கட்சியின் கூட்டணி அமைத்திருந்த பொழுதும் விடுதலை சிறுத்தைகளுக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்க படாமல் இருந்ததை சற்றும் கவனிக்காமல் தொண்டர்களுக்கும் துணையாக நிற்காமல் தன் பதவியை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த திருமாவளவனுக்கு மற்றொரு நம்பிக்கையாக அதிமுக பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகியது அமைந்தது! அதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2024 ஆம் ஆண்டு தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று ஒரு பக்கம் கணக்கு போட்டுக் கொண்டிருந்த திருமாவளவனுக்கு ஆசையை காட்டி மீண்டும் திருமாவளவனை திமுக ஏமாற்றியுள்ளது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் கூட்டணி பேச்சு வார்த்தைகளுக்கு முன்பு எந்த கூட்டணியாக இருந்தாலும் சரி எந்த கட்சியாக இருந்தாலும் சரி மூன்று சீட்டுகள் கொடுத்தால் மட்டுமே நாங்கள் அவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்ற திட்டவட்டமாக பேசி வந்த திருமாவளவனை எப்படியோ பேசி ஏமாற்றி இரண்டு சீட்டுகளை மட்டும் கொடுத்து திமுக மீண்டும் விடுதலை சிறுத்தைகளை தன் கட்சி உடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. இது அரசியல் வட்டாரம் மட்டுமின்றி சமூக வலைதளம் முழுவதும் பேசும் பொருளாக மாறியது. 

முன்னதாக தன்னை கட்ட பிரம்மச்சாரி என்றும் மக்களின் நலனுக்காகவே நான் செயல்படுகிறேன் என்றும் கூறிவரும் திருமாவளவன் பல இடங்களில் அவற்றிற்கு மாறாக நடைபெற்று வருவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வந்தது. சமீபத்தில் கூட ஒரு பொது நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு திருமாவளவன் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பேசிய ஒரு சீரியல் நடிகையை கவனித்து விட்டு நிகழ்ச்சி மீது ஆர்வம் இல்லாதது போல் அந்த தொகுப்பாளினியவே பார்த்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இதே போன்ற ஒரு மற்றுமொரு நிகழ்ச்சியிலும் திருமாவளவன் செய்த செயல் சமூக வலைதளங்களில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது திருமாவளவன், மதுரை எம்பி வெங்கடேசன் மற்றும் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட பலர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 

அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அனைவரும் சேர்ந்து ஒரு குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட பொழுது திருமாவளவன் மட்டும் கீழே அமர்ந்திருக்கும் தொகுப்பாளினியை பார்த்து கொண்டுள்ளார், அனைவருமே கேமராவை பார்க்கும் பொழுது அவர் மட்டும் தொகுப்பாளினியை பார்க்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு திருமாவளவன் இந்த போட்டோவை குறிவைத்து பல கடுமையான விமர்சனங்கள் இதற்கு முன் வைக்கப்பட்டு வருகிறது.