நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்ற போதைப் பொருள் கடத்தல் விவகாரம் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. முதலில் டெல்லியில் பிடிபட்ட போதை பொருள் தயாரிப்பதற்கான வேதிப்பொருள் கடத்திய கும்பல் போதைப் பொருட்களின் தலைவனாக திமுக பிரமுகராக இருந்த ஜாபர் சாதிக்கை பற்றிய விசாரணைகளில் கூறியதை அடுத்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்தார். இருப்பினும் அவர் தலைமறைக்காக இருந்தபொழுது டெல்லி போலீசார் ஜாபர் சாதி வீட்டில் நடத்திய சோதனையில் பல போலி பாஸ்போர்ட்களையும் சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றியது கைப்பற்றப்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் ஜாபர் வெளிநாடுகளுக்கு சென்ற போதை கடத்தல் முயற்சிகளை மேற்கொண்டாரா அல்லது அங்கிருந்து போதை பொருட்கள் கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன, அதே சமயத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளில் சினிமா பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் அடிக்கடி ஜாபர் சாதிக்கீட்டிற்கு வந்து சென்றதையும் அதிகாரிகள் கண்டறிந்து சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் ஜாபர் சாதிக் இருக்கும் என்ன தொடர்பு என்பது குறித்த விசாரணையையும் ஒரு பக்கம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் ஜாபர் சாதிக் டெல்லி போலீஸ்சின் விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை தமிழ் சினிமா தயாரிப்பில் தான் செலவழித்துள்ளதாக கூறியது வேறு அதிகாரிகளின் சந்தேகத்தை மேலும் தீவிர படுத்தியது. இதனை அடுத்து என் சி பி அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை தன் காவலில் எடுத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. இந்த விசாரணையில் மற்றுமொரு தகவலையும் ஜாபர் சாதத்தை கொடுக்க அதன் அடிப்படையில் அவரது கூட்டாளியான சதானந்தம் என்பவரை என்சிபி அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சதானந்தம் குறித்த விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்ட பொழுது போதை பொருள் கடத்தலில் சென்னை பகுதிக்கு ஜாபர் சாதிக்கு முக்கிய கூட்டாளியாக சதானந்தம் செயல்பட்டுள்ளார் என்பதும் சதானந்தம் ஒரு தொழில் அதிபர் என்பதால் அதனை பயன்படுத்தியே இந்த போதை கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சதானந்தத்தை டெல்லி அழைத்து சென்று என் சி பி அதிகாரிகள் கேட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் போதை கடத்தல் குடோனை அமைத்து ஜாபர் சாதிக் மற்றும் சதானந்தம் கடத்தலில் ஈடுபட்டுள்ளது என் சி பி அதிகாரிகளுக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, சென்னை பெருங்குடியில் காமராஜர் தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு நடுவே ஒரு காலனி போன்ற வீட்டில் அமைத்து அதில் மூன்று வீடுகளை மட்டும் வாடகைக்கு விடுத்து விட்டு மற்ற மூன்று வீடுகளை போதை பொருளின் குடோனாக பயன்படுத்தி வந்துள்ளனர் இதனை விசாரணையில் கண்டறிந்த என் சி பி போலீசார் சென்னை விரைந்து சதானந்தத்திற்கு சொந்தமான அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று போதை கடத்தலின் குடோனாக செயல்பட்டு வந்த அந்த மூன்று வீடுகளையும் சோதனை இட்டு உள்ளது.
அதோடு பெரும்பாலான நேரங்களில் அந்த மூன்று வீடுகளும் பூட்டி கிடப்பதாகவும் முகம் தெரியாத நபர்கள் என்னிடம் இருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர் என்பதையும் மற்ற மூன்று வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் அதிகாரிகளில் கேட்டதற்கு கூறியுள்ளனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அந்த குடோனில் டெல்லி போலீஸ் மேற்கொண்ட சோதனையில் பல ஆவணங்களையும் ஆதாரங்களையும் பறிமுதல் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர். முன்னதாக ஜாபர் சாதிக்கின் கூட்டாளியான சதானந்தம் கடந்த 2013 ஆம் ஆண்டு சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2018 ஆண்டில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான சூடோபெட்ரின் போதை மருந்து மலேசியாவிற்கு கடத்தியதும் 2019 ஆண்டு 1.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிபட்ட சம்பவத்திலும் சதா தொடர்புடையவராக இருந்துள்ளார் என்பதையும் என் சி பி போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
இப்படி தொடர்ச்சியாக 2019 வரை போதை கடத்தல் விவகாரத்தில் தொடர்பு பட்டிருக்கும் சதானந்தம் தற்போது சிக்கி இருப்பது தமிழகத்தில் போதை கடத்தல் தலை விரித்தாடியுள்ளது என்பது புலப்படுகிறதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் இவர்கள் அனைவரும் எப்படி திமுகவின் ஆட்சி காலத்தில் இத்தனை அதிகாரங்களை பெற்றார்கள் என்ற கேள்வியும் தற்போது இணையங்களில் வலுவாக வெடித்துள்ளது.