24 special

இந்தியாவை பார்த்து வாய் விட்ட ட்ரம்ப்! உடனடியாக பதிலடி கொடுத்த மோடி! போர் விமானத்திற்கு.. நோ சொன்ன இந்தியா

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய இறக்குமதிகளுக்கு 25% இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபரை சமாதானப்படுத்தும் விதமாக, அமெரிக்காவில் இருந்து சில பொருட்களை வாங்குவதை அதிகரிக்க இந்திய அரசு பரிசீலித்து வருவதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு உபகரணங்கள், குறிப்பாக F-35 போர் விமானங்கள் வாங்குவது இதில் அடங்காது என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.


அமெரிக்காவிடம் F-35 போர் விமானங்கள் வேண்டாம் என்று இந்தியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. ட்ரம்ப்பின் வரிவிதிப்புக்கு எதிராக உடனடி பதிலடி நடவடிக்கைகளை இந்தியா எடுக்க விரும்பவில்லை என்றும், இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர விரும்புவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ப்ளூம்பெர்க் குறிப்பிட்ட தகவல்களின்படி, இந்தியா அமெரிக்காவில் இருந்து இயற்கை எரிவாயு, தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தங்கத்தின் கொள்முதலை அதிகரிக்கக்கூடும்.

ஆனால், ட்ரம்ப்பின் முக்கிய கோரிக்கையாக உள்ள கூடுதல் பாதுகாப்பு உபகரணங்களை அமெரிக்காவில் இருந்து வாங்குவதை மோடி அரசு தவிர்க்கும் என்று அறிக்கை கூறுகிறது. ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு இந்தியாவிற்கு எதிராக மேலும் அபராதம் விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.அவரை மேலும் கோபப்படுத்தும் சாத்தியக்கூறுகள் வகையில் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டவை தவிர, அமெரிக்காவிலிருந்து கூடுதல் பாதுகாப்பு உபகரணங்களை வாங்க இந்தியா தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இதில் பெரும்பாலானவற்றின் விநியோகம் பல ஆண்டுகள் தாமதமாகியுள்ளது.

F-35 ஸ்டெல்த் போர் விமானத்தை வாங்குவதில் நாட்டிற்கு ஆர்வம் இல்லை என்று இந்தியா அமெரிக்காவிற்குத் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் மோடியின் வெள்ளை மாளிகை பயணத்தின் போது, ட்ரம்ப் ஐந்தாம் தலைமுறை F-35 போர் விமானங்களை விற்பனை செய்ய முன்வந்தார்.ஆனால், இந்திய அதிகாரிகள் அமெரிக்காவிடம், பாதுகாப்பு உபகரணங்களை கூட்டாக உருவாக்குவதிலும், அவற்றை இந்தியாவில் உற்பத்தி செய்வதிலும் இந்தியா அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிவித்தனர். F-35 ஜெட் விமானங்களை வாங்குவதில் இந்தியா ஆர்வம் காட்டாத நிலையில், இந்தியா ரஷ்யாவின் Su-57 ஐந்தாம் தலைமுறை ஜெட்களை சுமார் 50-60 வாங்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை மேலும் கோபத்திற்கு உள்ளாக்கும்.

இந்தியா தனது சொந்த ஐந்தாம் தலைமுறை போர் விமானமான AMCA-ஐ உருவாக்கி வருகிறது  அதற்கு முன்  இந்திய விமானப்படையின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், சீனா மற்றும் பாகிஸ்தானின் மேம்படுத்தப்பட்ட வான்வழி சக்தியை எதிர்கொள்வதற்கும், இந்திய விமானப்படை வெளிநாடுகளிலிருந்து சுமார் 3 படைப்பிரிவு ஐந்தாம் தலைமுறை ஜெட்களை வாங்க முடிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில், F-35 மற்றும் Su-57 மட்டுமே வாங்குவதற்கு கிடைக்கின்றன. ஆனால் இந்தியா F-35 வேண்டாம் என்ற நிலைபாட்டில் உள்ளதால் ரஷ்யாவின் Su-57 ஐ வாங்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் வர்த்தக வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்தியாவின் பல பொருட்களுக்கு 25% வரை வர்த்தக வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி மற்றும் ஆயுதங்கள் வாங்கும் இந்தியாவிற்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இது, ஏப்ரல் 2 அன்று ட்ரம்ப் அறிவித்த 26% வரியை விட 1% குறைவாகும்.

ட்ரம்ப், தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில், "இந்தியா நமது நண்பராக இருந்தாலும், அவர்களின் வர்த்தகக் கொள்கைகள் மிகவும் கடுமையானவை. உலகிலேயே மிக உயர்ந்த வரிகளை விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மேலும், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் செயல்களைக் கண்டிக்கும் இந்த நேரத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி மற்றும் ராணுவ தளவாடங்களை அதிகம் வாங்குவது நல்லதல்ல. எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25% வரி மற்றும் அதற்கான அபராதத்தை செலுத்த நேரிடும்," என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.