24 special

இந்தியாவின் மேல் கைவைத்து.. வசமாக சிக்கிய டிரம்ப்.. அமெரிக்காவுக்கு ஆப்படித்த இந்தியா.. தலைகீழ் திருப்பம்..!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

தற்போது இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவுடன் வணிகம் செய்ததற்கான அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதே நேரத்தில், பாகிஸ்தானில் உள்ள எண்ணெய் வளத்தை மேம்படுத்த அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இந்தியாவிடமிருந்து விலகிப் பாகிஸ்தான் பக்கம் ட்ரம்ப் நெருக்கமாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 


பாகிஸ்தான் நீண்டகாலமாகவே, தனது கடற்கரையில் அதிக அளவில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கூறி வருகிறது. பாகிஸ்தானின் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் இருப்பு 500 மில்லியன் பீப்பாய்களாக உள்ளதாகக் கூறப்படுகிறது.ஏமாற்றுவது மற்றும் பொய் சொல்வது ஆகிய இரண்டை மட்டுமே பாகிஸ்தான் அமெரிக்காவுக்குத் தந்துள்ளது என்று, 2018 ஆம் ஆண்டில் சொன்ன ட்ரம்ப், இப்போது, பாகிஸ்தான் மீது பாசம் காட்டுகிறார். இரண்டாவது முறை அதிபரானதும், கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் தனது முதல் உரையிலேயே, அபே கேட் குண்டுவெடிப்புக்கு மூளையாக இருந்தவரைக் கைது செய்ய உதவியதற்காகப் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த ஜூன் மாதம், பாகிஸ்தான் பீல்டு மார்ஷல் அசிம் முனீருக்கு, வெள்ளை மாளிகையில் மதிய விருந்தளித்து ட்ரம்ப் சிறப்பித்தார். பாகிஸ்தானின் இராணுவத் தலைவருக்கு அமெரிக்க அதிபர் விருந்தளித்தது இதுவே முதல் முறையாகும்.கடந்த ஜூலை மாதம், பாகிஸ்தான் விமானப்படைத் தலைவர் ஜாகீர் அகமது பாபர் சித்து, பென்டகன், வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பாகிஸ்தானுடன் ட்ரம்ப் நெருங்கிப் பழக, தொடக்கப் புள்ளியாக ஆப்ரேஷன் சிந்தூர் இருந்தது.  ஏனென்றால் அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எப்16 விமானத்தை இருநாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியாக ட்ரம்ப் தன்னிச்சையாக அறிவித்தார். அதை பாகிஸ்தான் ஆமோதித்தது. கூடுதலாக,ட்ரம்ப் குடும்பத்தினர் தொடர்புடைய World Liberty Financial நிறுவனத்துக்குப் பாகிஸ்தான் உதவியது.

2026 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் பெயரைப் பரிந்துரைத்தது. இவைதாம் பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் முழு ஆதரவைக் கொடுப்பதற்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா- சீனா இருநாடுகளிடமிருந்து பாகிஸ்தான் அதிக ஆதரவை பெறுவது இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் என்ன நேரத்தில் என்ன சொல்வார் ? என்ன செய்வார்? என்று கணிக்க முடியாதவராக இருக்கும் ட்ரம்பின் நிர்வாகத்தில் எதுவும் நிரந்தரமானது அல்ல என்று கூறும் அரசியல் வல்லுநர்கள், பாகிஸ்தானுடன் ட்ரம்பின் பாசம் வளருமா? தேயுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதற்கு காரணம் தற்போது வெளிவந்துள்ளது. அந்தமான் கடலில் கயானா போன்ற எண்ணெய் களஞ்சியம் விரைவில் கண்டறியப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியா எரிசக்தி துறையில் தன்னிறைவை நோக்கி செல்லும். அதேபோல் இந்தியாவின் பொருளாதாரத்தை 3.7 டிரில்லியன் டாலரிலிருந்து 20 டிரில்லியன் டாலராக உயர உள்ளதுஅரசாங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி நாட்டின் கச்சா எண்ணெயில் 85 சதவீதம் வெளிநாடுகளிடம் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். அதேபோல் உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன. 

இந்தியாவின் எரிசக்தித் துறை ஒரு பெரிய மாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது. அந்தமான் கடலில் எண்ணெய் களஞ்சியத்தை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கயானாவில் கண்டுபிடிக்கப்பட்டதை போல் அங்கு விரைவில் நம் நாடு பெரிய எண்ணெய் களஞ்சியத்தை கண்டுபிடிக்கும். இது சுமார் 1,84,440 கோடி லிட்டர் கச்சா எண்ணெயை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. என தெரியவந்துள்ளது