
தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் மோடியின் மீதும் அதன் அரசு மீதும் கரியை பூசவேண்டும் என்ற எண்ணத்தில் தான் சில உள்நாட்டு விரோதிகள் செயல்பட்டு வருகிறார்கள். மோடி அரசுக்கு நான்கு விதமான எதிரிகள் உண்டு. நாட்டுக்கு வெளியே இருக்கிற மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், அண்டை நாடான சீனா பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகள். இரண்டாவதாக நம் நாட்டிற்குள் இருக்கும் எதிரிகள், அவர்களுக்கு இந்தியாவை வீழ்த்தவேண்டும் என நினைக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கும் தொடர்புண்டு. அவர்கள் இங்கே அரசியல், மீடியா, மதம், ஜாதி, மொழி என்று பல விதமான ஆயுதங்களை கையில் எடுப்பார்கள். இப்பற்பபட்ட சூழ்நிலைகளைகையாள்வது என்பது அசாதாரணம். இதனை அசாத்தியமாக கையாண்டு வருகிறார் பிரதமர் மோடி. .
இந்தியாவுக்கு எதிராகச் சென்ற நாடுகளை ஆதரவாகத் திருப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால், அதை மிகச் சாதாரணமாகச் செய்து, வெளியுறவுக் கொள்கையில் ஒரு புதிய பாணியை மோடி பாணி என்று உருவாக்கி உலகையே வியக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி.இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுடன் இணைந்து தெற்காசியாவிலேயே மிக பெரிய கச்சா எண்ணெய் கிடங்கு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாகிஸ்தானுடன் இப்போதுதான் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை முடிவு செய்துள்ளோம். அதன்படி, பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை உருவாக்க இருக்கிறோம். இது தெற்காசியாவிலேயே மிகப்பெரியதாக இருக்கும். இதற்காக தகுதியுள்ள எண்ணெய் நிறுவனங்களை தேர்வு செய்து வருகிறோம். யாருக்கு தெரியும், ஒருநாள் பாகிஸ்தானிடம் இருந்துகூட இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நிலை வரலாம்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயானை பிரதமர் மோடி, தொலைபேசியில் தொடர்புகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இரு நாட்டு மக்களின் பொதுவான நலனுக்காக இரு தரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகள் இடையே பல்வேறு துறைகளில் உள்ள பரஸ்பர ஒத்துழைப்பின் முன்னேற்றங்கள் குறித்தும் விவாதித்தனர்.
இந்தியாவில் நீண்டகாலம் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்த 2-வது நபர் என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். அவரது சேவை தொடர வேண்டும் என்றும் அல் நயான் வாழ்த்தினார் என மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடின உழைப்பு மற்றும் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களால் இந்த சாதனை சாத்தியமானது.
உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியா திகழ்வதாக சர்வதேச நிதி அமைப்புகள், சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். பொருளாதார ரீதியாக நாட்டின் நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவது மிகப்பெரும் எரிச்சலை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளது . உலக நாடுகளால் விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதார தடைகள் காரணமாக, மலிவு விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் இண்ட நடவடிக்கை துரதிர்ஷ்டவசமாக, உக்ரைன் உடனான ரஷ்ய போர் முயற்சியைத் தக்கவைக்க உதவுகிறது. இது இந்தியாவுடனான எங்கள் உறவில் நிச்சயமாக எரிச்சலூட்டும் ஒரு புள்ளியாகும். என அமெரிக்கா புலம்பி வருகிறது.