24 special

உறவில் விரிசலா..? இந்திய கோதுமைகளை நிராகரிக்கும் துருக்கி..!

modi,
modi,

புதுதில்லி : ரஷ்யா உக்ரைன் மோதலை தொடர்ந்து இந்தியா கோதுமை ஏற்றுமதியில் உலகளாவிய ஏற்றுமதியாளராக  உருவெடுத்திருந்தது. ஆனால் கடந்த மே 13 அன்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் கோதுமை ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. பஞ்சாப் உள்ளிட்ட கோதுமை விளையும் மாநிலங்களில் ஏற்பட்ட வெப்பத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாலும் உள்நாட்டில் கோதுமை விலை அதிகரித்ததாலும் இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.


இந்நிலையில் இந்தியாவிலிருந்து துருக்கிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கோதுமை மீண்டும் இந்தியாவுக்கே திருப்பியனுப்பப்படுவது பரபரப்பை கிளப்பியுள்ளது. S&P க்ளோபல் கமாடிட்டி இன்சைட்ஸ் அறிக்கையின்படி பைட்டோ சானிட்டரி பைட்டோ சானிடரி கவலைகளால் இந்திய கோதுமை பொருட்களுக்கு துருக்கி அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். ஏற்கனவே சென்ற ஒரு கோதுமை கப்பல் மே 29 அன்று துருக்கி அதிகாரிகளால் திருப்பியனுப்ப பட்டுள்ளது.

அந்த கப்பல் ஜூன் மத்தியில் குஜராத் கண்டலா துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச பயனாளிகள் கோதுமை விநியோகத்தை பாதுகாக்கும் முயற்சியில் இருக்கையில் துருக்கியின் இந்த முடிவு சர்வதேச நாடுகளை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது. அதேநேரத்தில் இந்தியாவின் ஏற்றுமதி தடை உத்தரவால் இந்திய துறைமுகங்களில் தோராயமாக 1.8மில்லியன் டன் தானியங்கள் தேங்கியிருப்பதாக சொல்லபப்டுகிறது.

இந்த தேக்கத்தால் வர்த்தகர்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆனால் இந்திய வர்த்தகத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில் கடந்த ஓராண்டில் மட்டும் உள்நாட்டில் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலை 14 முதல் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த தடையால் விலை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கின்றன. 

மேலும் தடை அறிவிப்பு வெளியானதுமே உணவுதானியங்களை ஏற்றிச்சென்ற 4000 ட்ரக்குகள் காண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் துருக்கி விவசாய மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் " 56,877 டன் கொடுமைகளில் ரூபெல்லா நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் MV INCE AKDENIZ கப்பல் குஜராத்திற்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.