24 special

அம்பலமாகும் ட்விட்டர் நிறுவனத்தின் வில்லத்தனம்..! டிரம்ப் கணக்கை முடக்கியதும்- இந்து மத உணர்வும்! ஆப்பு வைத்த நீதிமன்றம்..!

Twitter
Twitter

அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும், மிக முக்கிய பிரபலங்களும், சினிமா பிரபலங்களும், பொதுமக்களும், மிகவும் ஆர்வமாக சமூக வலைத்தளத்தில் இருக்கின்றனர் என்றால் அதில் குறிப்பாக  ட்விட்டர் நிறுவனத்தை குறிப்பிடலாம். அதற்கெல்லாம் காரணம் உலக அளவில் மிக முக்கிய பங்காற்றும் ஒரு சமூக வலைத்தளமாக ட்விட்டர் இருக்கின்றது. ஆனால் அதிலும் ஒரு அரசியல் இருக்கிறது என்பதை நிரூபணம் செய்யும் விதமாக, தற்போது "இந்து மதத்தை அவமதிப்பது ஏன் என ட்விட்டருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது. இதன் பின்னணியை தற்போது பார்க்கலாம்.


ஏத்திஸ்ட்ரிபப்ளிக் என்ற கணக்கில் இருந்து இந்து மதக் கடவுளை எப்போதும் விமர்சனம் செய்தும், அவமதிக்கும் விதமாக பல்வேறு சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், அந்த கணக்கை முடக்க வேண்டும் என்றும் ஆதித்யா சிங் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் விபின் சங்கி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் மத உணர்வை புண்படுத்தும் கணக்குகளை நீக்குவதில் ட்விட்டர்  நிறுவனம் அலட்சியம் காட்டுவதாக சுட்டிக்காட்டினர்.



இதற்கு ட்விட்டர் நிறுவனம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், புகார் தெரிவித்துள்ள கணக்கிலிருந்து 6 பதிவுகளை நீக்கி உள்ளோம். மேலும் அந்த பதிவு தொடர்பாக வழக்கும் இருக்கின்றது. ஆனால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் ஒருவரின் கணக்கை முடக்க முடியாது என குறிப்பிட்டு உள்ளார். இதற்கு நீதிபதிகள் பல அதிரடி கேள்வியை முன்வைத்து இருக்கின்றனர்.

அப்படி என்றால், இதற்கு முன்னதாக நீங்கள் எப்படி டொனால்டு ட்ரம்ப்பின் கணக்கை முடக்கினீர்கள் ? ஆக உங்களுக்கு பிரச்சனையாக இருந்தால், அந்த பதிவுகள் மீது நடவடிக்கை எடுப்பீர்கள்; இதுவே குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக பதிவிடும் நவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்கள். அதுவும் இந்து மதம் என்பதால் அமைதியாக இருக்கின்றீர்கள். வேறு மதமாக இருந்தால் அமைதியாக இருந்து இருப்பீர்களா? என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

மேலும் ட்விட்டர் நிறுவனம் இந்திய ஐடி விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும், தனிநபர் கணக்கு முடக்கம் தொடர்பாக ட்விட்டர் வகுத்துள்ள கொள்கைகள் என்னவென்று அனைத்தையும் விவரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் கூட இந்துமதம் என்றால் ஒரு விதமான டார்கெட் வைத்து செயல்படுவது அம்பலமாகி உள்ளது என மக்கள் உணர தொடங்கி உள்ளனர்.