24 special

உதய்ப்பூர் சம்பவம்..! 20 லட்சம் நன்கொடை..! சிக்கும் அரசியல் பிரபலம்..!


உதய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் தையல் தொழிலாளி ஒருவர் வகுப்புவாத அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பல அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தானை சேர்ந்த அரசியல் தலைவர் வகுப்புவாத அமைப்புக்கு 200000 வழங்கியதாக செய்திகள் கசிகின்றன.


அந்த கொடூரமான உதய்ப்பூர் கொலை சம்பவத்தில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட தாவத் இ இஸ்லாமி அமைப்பு ராஜஸ்தான் எல்லையோர மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இருபது லட்சம் ரூபாய் நன்கொடையாக இந்த ஆண்டு பெற்றுள்ளது என பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஏஜென்ஸிக்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர் நன்கொடை வழங்கியதாக கூறப்படும் வழக்கு புலனாய்வுதுறை அமைப்புகளின் ரேடாரின் கீழ் உள்ளது. புலனாய்வு அமைப்புக்கள் ஜெய்சால்மர் மற்றும் பார்மர் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தானை சேர்ந்த அமைப்பின் சமீபத்திய பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளன. 

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே இஸ்லாமிய பணிகள் என்ற போர்வையில் ஜெய்சால்மர் மாவட்ட மக்களிடம் இருந்து 20 லட்சம் மற்றும் அதற்கு மேலாக நிதியை வாங்கியுள்ளதாக புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குஜராத்தின் சில பகுதிகள் மற்றும் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளிலும் அந்த அமைப்பின் செயல்பாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த பாகிஸ்தான் அமைப்பு எல்லையோரத்தில் வசிக்கும் மக்களை குறிப்பாக இளம்வயதினரை இலக்காக கொண்டு ஆன்லைன் மற்றும் சிலவழிகளின் மூலம் சில சர்ச்சைக்குறிய இலக்கிய வாக்கியங்களை விநியோகித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தாவத் இ இஸ்லாமி அமைப்பு 1981ல் நிறுவப்பட்டது என அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் அதில் உலகம் முழுக்க குர்ரான் மற்றும் சுன்னாவை பார்ப்பப்பை பணியாற்றும் உலகளாவிய அரசியல் அல்லாத இஸ்லாமிய அமைப்பு என அந்த வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதய்ப்பூர் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளில் கவுஸ் முகம்மது என்பவர் இந்த அமைப்புடன் தொடர்பில் உள்ளார் என ராஜஸ்தான் மாநில டிஜிபி எம்.எல்.லாதர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த வழக்கை தற்போது NIA கையிலெடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.