புதுதில்லி : கியான்வாபி மசூதி சர்ச்சைகளுக்கு மத்தியில் நபிகள் நாயகம் பற்றிய நுபுர்ஷர்மாவின் கருத்து இந்தியாவெங்கும் பெரும் பிரச்சினையாக மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்மீது பல மாநிலங்களில் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்குகளையெல்லாம் ஒன்றிணைத்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
நுபுர் ஷர்மாவின் பேச்சுக்கு இஸ்லாமிய நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில் ஹிந்து கடவுளான ஹனுமான் பற்றி முகம்மது ஸுபைர் எனும் பத்திரிக்கையாளர் தரக்குறைவாக பேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டார். அவர் கைதுக்கு தாராளவாதிகள் உட்பட பலர் கொதித்தெழுந்துள்ளனர். பத்திரிக்கை சுதந்திரம் தனிமனித சுதந்திரம் என வகுப்பெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நம்பிக்கையை அவமதிப்பதாக யாரும் பொங்கி எழவில்லை.
மேலும் ஐநா சபையே ஸுபைரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நேற்று நுபுர் ஷர்மா கருத்து தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் " நுபுர் ஷர்மாவின் நாக்கு நாட்டையே தீக்கிரையாக்கியுள்ளது. அவர் இந்த நாட்டுமக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும்.
உதய்ப்பூரில் நடந்த துரதிர்ஷ்டாவசமான கோரசம்பவத்திற்கு நுபுர் கோபமே காரணம். ஒருவருக்கு எதிராக நீங்கள் புகாரளித்தால் (நுபுர், ஜிண்டால்) அந்த நபர் கைதுசெய்யப்படுவார். ஆனால் உங்களை யாரும் தொட துணிவதில்லை. நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்களுக்கு நுபுர் ஷர்மா மட்டுமே பொறுப்பு" என கடுமையாக உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
பிஜேபி முன்னாள் செய்தி தொடர்பாளர்களான நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். அதை குறிப்பிட்ட உச்சநீதிமன்றம் நீங்கள் புகார் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார். உங்களை தொட யாருக்கும் துணிவில்லை என கூறியுள்ளது.
ஆனால் இதே நீதிமன்றம் வெவ்வேறு வழக்குகளில் இது பத்திரிக்கை சுதந்திரம் தனிமனித சுதந்திரம் பேச்சுரிமை என கூறி வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது என நடுநிலையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.