24 special

நேற்று முளைத்த காளான் உதயநிதி!....மத்திய அமைச்சருக்கு ஆதரவாக களத்தில் வந்த அதிமுக!

Udhayanidhi stlin ,Jayakumar
Udhayanidhi stlin ,Jayakumar

சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்கள் மழை வெள்ளத்தால் சிக்கி வந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக மீது குற்றசாட்டு வலுத்து வந்தது, குறிப்பாக கடந்த ஆட்சியை விட தற்போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. ஆனால், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை எதிர்த்து குறை சொல்லி அரசியல் செய்கிறது என விமர்சனத்தை முன் வைத்தது. மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண தொகையை அதிகரித்து தர எதிர்க்கட்சிகள் கேட்ட நிலையில், திமுக மத்திய அரசுக்கு குறிப்பிட தொகை வேண்டி கடிதம் எழுதி இருந்த நிலையில் அமைச்சர் உதயநிதி பேசியது பெரிய விவகாரமாக மாறியது.


கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக உதயநிதியை விமர்சித்தார். அரசியல் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் எனவும் அரசியலில் இருப்பவர் இப்படி பேச கூடாது என கூறினார். முன்னதாக உங்க அப்பன் வீட்டு காச கேட்டோம் என உதயநிதிக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்தார். தற்போது நிர்மலா சீதாராமன் பேசியதும், உதயநிதி நான் என்ன கெட்ட வார்த்தையால் பேசினேனா மரியாதைக்குரிய நிதி அமைச்சரிடம் மரியாதையாக தான் கேட்கிறேன்! என்னுடைய சொந்த செலவிற்காகவும் நான் கேட்கவில்லை! தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரை மத்திய அரசு பேரிடர் என்று ஒத்துக்கொள்வதே இல்லை! சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட மக்களும் தென் மாவட்ட மக்களின் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் வெள்ள பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் மீளாமல் உள்ளனர், அவர்களை பாதிப்பில் இருந்து மீட்பதற்காகவே தற்போது நாம் செலுத்திய வரியை கேட்கிறோம் என பேசினார். 

இப்படி உதயநிதி பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல் வேல்முருகன் போன்றோர்கள் உதயநிதிக்கு அரசியல் வாழ்கை சரியாக தெரியவில்லை என விமர்சனம் செய்து வந்தனை. இந்நிலையில் நேற்று எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசியலில் நாகரிகம் வேண்டும். நேற்று முளைத்த காளான் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு வாய் துடுக்கு அதிகம். வாய்துடுக்கு அதிகம் என்பதால் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. வாய்க்கு வந்ததை பேசிவிட்டு வம்பில் மாட்டிக் கொள்கிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னதும் நான் அந்த மாதிரியெல்லாம் சொல்லவே இல்லை. மத்திய அரசு தாராளமா நிதி கொடுக்க வேண்டும் என்றுதான் சொன்னேன் என சொல்கிறார். பேசிட்டு ஏன் வாங்கி கட்டிக்கிறீங்க? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பான முறையில் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். பக்குவம் இல்லாத ஒரு அரசியல்வாதி என்றால் அது உதயநிதிதான். என் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் திமுகவை எதிர்த்தும் பேசினார். 

அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து வெளியில் வந்த பிறகு மவுனம் காத்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜகவிற்கு தற்போது சப்போர்ட் செய்ய துவங்கியுள்ளனர். முன்னதாக அமைச்சர் பொன்முடிக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை உறுதி செய்ப்பட்ட நிலையில், அதிமுகவை சேர்ந்த ஜெய்குமார் தான் முதல் ஆளாக சரணியான தீர்ப்பு என விமர்சனத்தை முன் வைத்தார். இப்போது நிவாரண தொகை உடனடியாக மத்திய அரசு கொடுக்க வேண்டும் என திமுகவை சேர்ந்தவர்கள் கேட்கும்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மத்திய அரசு உடனடியாக தராது பாதிப்புகளை அறிந்து தொகை வெளியிடும் என தெரிவித்துள்ளார். இப்படி அதிமுகவை சேர்ந்தவர்கள் மத்திய அரசுக்கு நெருக்கம் காட்டுவதால் 2026ம் ஆண்டு தேர்தல் நெருக்கும்போது நிச்சயம் பாஜக பக்கம் கூட்டணியை அதிமுக அறிவிக்க கூடும் என தகவல் தெரிவதாக கூறுகின்றனர்.