24 special

சமயம் பார்த்து ஸ்டாலினை கவுத்தி விட்ட தயாநிதி மாறன் பின்னணி என்ன தெரியுமா?

mk stalin, dayanithi
mk stalin, dayanithi

ஆசையாக ஓடிப்போய் INDI  கூட்டணியில் சேர்ந்து கொண்ட திமுகவிற்கு இனிவரும் காலத்தில் கூட்டணி நிலைக்குமா நிலைக்காதா என்ற தள்ளாட்டத்தில் இருந்து வருகிறது. திமுகவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த சனாதன கருத்துக்கள் இந்தியா முழுவதும் எதிர்ப்பை பெற்ற நிலையில் INDI கூட்டணியிலும் அதற்கான எதிர்ப்புகள் எதிரொலித்தது. அதாவது அகில இந்திய அளவிலான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமானக்கே சி வேணுகோபால் சமதர்மம் சமுதாயம் என்பது காங்கிரஸ் கட்சியின் ஒருமித்த நிலைப்பாடு எங்கள் கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அவர்களது கருத்துக்களை சொல்வதற்கு அனைத்து உரிமை உண்டு! அனைத்து மத நம்பிக்கையையும் மதிக்கிறோம் அவர்களுடைய நம்பிக்கையை மதிக்கிறோம் என்று பட்டும் படாமலும் தெரிவித்தார். 


ஆனால் மம்தா பானர்ஜி வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நம்முடைய துவக்கமாக அமைந்தது நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன் இந்த பிரிவினரையும் புண்படுத்தக்கூடிய எந்த செயலும் நாம் ஈடுபடக்கூடாது என்று கூறி உதயநிதி கருத்திருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனை அடுத்து இதே காரணத்தால் 5 மாநிலங்களின் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதிலும் உதயநிதியின் சனாதன விவகாரம் பெருந்தோல்வியை INDI கூட்டணிக்கு ஏற்படுத்தி உள்ளதால் உதயநிதியை பெரும்பாலான பகுதிகளில் பேச வேண்டாம் என்று திமுக தலைமைக்கு கூட்டணி தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதே நேரத்தில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட தர்மபுரி தொகுதி திமுக எம்பி செந்தில்குமார் ஹிந்தி பேசும் மாநிலங்களை நாங்கள் பொதுவாக பசு கோமியம் மாநிலங்கள் என்று தான் கூறுவோம் அவர்களால் அங்கு நடைபெறும் தேர்தல்களில் மட்டுமே வெற்றியை பெற முடியும் அதுவே பாஜகவின் பலம் ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் அந்த கட்சியால் வெற்றி பெற முடிவதில்லை என்று பாஜகவை விமர்சனம் செய்வதாக கூறி ஒட்டுமொத்த வட இந்தியர்களையும் விமர்சனம் செய்தார்,, அதில் காங்கிரசும் INDI கூட்டணியும் உடன்பட்டு இருக்கிறது என்பதையும் மறந்து! இப்படி கோமூத்ரா விவகாரத்தை திமுக எம்பி முன்வைத்து IND கூட்டணியில் திமுகவின் இடத்தை தள்ளாட வைத்துள்ளார். இந்த நிலையில் தயாநிதி மாறன் வேறு திமுகவை மற்றொரு வம்பில் சிக்க வைத்துள்ளார்.

அதாவது இந்தி பேசும் மக்கள் எங்களுக்காக கழிப்பறைகளையும் சாலைகளையும் சுத்தம் செய்கிறார்கள் என்று திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஒரு நிகழ்ச்சியில் இவர் பேசிய இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. மேலும் இதற்கு கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகிறது. இதன் பின்னணி குறித்து விசாரித்த பொழுது இந்த முறை தயாநிதிமாறனுக்கு எம்பி சீட்டு கொடுக்க வேண்டாம் என்று திமுக எடுத்த முடிவின் விளைவாகவே தயாநிதி மாறன் இந்த கருத்துக்களை பொது வெளியில் பேசியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் தயாநிதிமாறன் முதல்வரை எம்பி சீட்டு கொடுக்காத காரணத்தினால் பழி வாங்கி விட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இப்படி திமுக முதல்வர் மக்களை பொருட்படுத்தாமல் டெல்லி வரை சென்று INDI கூட்டணியில் தன் மகன் ஏற்படுத்திய சர்ச்சைக்காக மன்னிப்பு கேட்டு வந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை திமுக எம்பி தயாநிதி மாறன் கிளப்பி உள்ளது இனி அவ்வளவுதான்! யார் நேரில் சென்றாலும் INDI கூட்டணியில் நம் கட்சிக்கு நிலையான ஒரு இடம் இருக்காது என அறிவாலய தலைமை புலம்பி வருவதாக தகவல்கள் பெறப்படுகிறது.