தமிழகத்தில் பாஜக வேலை நடக்காது என்று உதயநிதி ஸ்டாலின் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்து இருக்கிறார்.
மத்திய அரசு பல மாநிலங்களில் இஸ்லாமியருக்கு எதிராக தூண்டி வருகிறது. டெல்லியில் அசைவம் சாப்பிட கூடாது என்று மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பது கூட மத்திய அரசு நினைக்கிறது. எந்த உடை அணிய வேண்டும் என்பது தனிமனித உரிமை அதிலும் மத்திய அரசு தலையிடுகிறது.
உணவு, உடை, வீடு கல்வி அனைத்து உரிமைகளும் மத்திய அரசு பறிக்கப்படுகிறது.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் தற்போது நமது முதலமைச்சர் ஒரு நல்லாட்சி வழங்கி வருகிறார். மத ஒற்றுமை மத நல்லிணக்கத்துக்காக என்றென்றும் நாம் பாடுபடுவோம்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தது திமுக தான், இளைஞரணி செயலாளராக பதவி ஏற்றவுடன் அதை கிழித்து எறிந்து முதன்முதலில் கைதானேன். இது பெரியார் பூமி பாஜகவின் வேலைகள் இங்கே பலிக்காது திராவிட முன்னேற்ற கழகம் என்றும் இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இத்தனை பேசிய உதயநிதி ஸ்டாலின் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ஏன் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மந்திரி சபையில் திமுக பங்கு பெற்றது கூறுவாரா? என பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.