சவால் விடுத்து அந்த சவாலில் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவி இருக்கிறார் விசிகவின் சங்க தமிழன், இது குறித்து என்ன நடந்தது என நாம் தெளிவாக தமிழகத்தில் "மலை அண்ணாமலை" திருமாவிற்கு வந்த போன் கால்.. கட்சியினர் செல்லவேண்டாம் என அறிவித்த பின்னணி.. என்ற தலைப்பில் தெரிவித்து இருந்தோம் அதனை படிக்க கிளிக்.!
நாம் நமது TNNEWS24 பக்கத்தில் என்ன தெரிவித்து இருந்தோமோ குறிப்பாக உளவு அமைப்புகள் தெரிவித்ததால் பாஜக அலுவலகத்திற்கு செல்வதை புறக்கணித்தோம் என விசிகவை சேர்ந்த சங்க தமிழன் என்பவர் தெரிவித்து இருந்தார் ஆனால் முழுமையான விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை ஆனால் நாம் என்ன நடந்தது என தெளிவாக குறிப்பிட்டு இருந்தோம்.
இது ஒரு புறம் என்றால் தனியார் ஊடகத்தில் சங்க தமிழன் கொடுத்த பேட்டி தற்போது இணையத்தில் கடும் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது பேட்டி எடுத்த மாதேஷ் சங்க தமிழனிடம் ஏன் சவால் விடுத்துவிட்டு நீங்கள் செல்லவில்லை என்று கேட்க, அதற்கு சங்க தமிழன் பல்வேறு விளக்கம் கொடுத்துவிட்டு இறுதியாக அண்ணாமலை போனில் நல்ல அமைதியாக பேசுகிறார்.
ஆனால் அவரிடம் போலீஸ் புத்தி இருக்கிறது, போலீஸ் காரங்க பார்த்தீர்கள் என்றால் முதலில் அமைதியாக பேசிவிட்டு பின்பு செய்யவேண்டியதை செய்வார்கள் எனும் பொருள்பட பேசினார், இதை பார்த்த பலரும் அண்ணாமலையிடம் விவாதம் செய்ய போனால் பெருத்த அடி நிச்சயம் என்பதை முன்பே உணர்ந்து தான் விசிகவினர் வாபஸ் வாங்கிவிட்டனர் என கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.
இது ஒருபுறம் என்றால் வழக்கமாக யூடுப் சேனல்களுக்கு நேரில் சென்று பேட்டி கொடுக்கும் சங்க தமிழன், தற்போது மாதேஷ் பேட்டி எடுக்க அழைத்த போது பேட்டி எடுக்க எனது அலுவலகத்திற்கு வாங்கள் என்று கூறினாராம் ஏன் என்று விசாரணை செய்ததில் பாஜக அலுவலகத்திற்கு அடுத்த கட்டிடத்தில் தான் தனியார் யூடுப் நிறுவனம் இருக்கிறது.
எங்கு அங்கு சென்றால் ஏதேனும் சர்ச்சை உண்டாகிவிடும் என அறிந்துதான் சங்க தமிழன் மாதேஷை நேரில் அழைத்து பேட்டி கொடுத்ததாக கூறப்படுகிறது. வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.