24 special

நிர்மலா சீதாராமன் போட்ட போடில் ஒரே நாளில் மாறிய உதயநிதி....!

udhayanithi, nirmala sitharaman
udhayanithi, nirmala sitharaman

மத்திய அமைச்சரை ஒருமையில் உதயநிதி பேசியது தற்போது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறிய நிலையில்நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உதயநிதியை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வைத்து வெளுத்து வாங்கினார் உன் அப்பன் வீட்டு பணமா ஆத்தா வீட்டு பணமா என கேட்கும் தெனாவட்டு எல்லாம் இங்க வேணாம் என வெளுத்து வாங்கினார். நேற்று டெல்லியில் பிரஸ் கிளப்பில் வைத்து ஒரு மணி நேரம் திமுக கூறிய தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து கடுமையாக விளாசி எடுத்தார் நிர்மலா சீதாராமன்இது தமிழகம் முழுவதும் உள்ள ஊடகங்களில் நேரலை செய்யப்பட்டது, இதனால் என்ன செய்வது என நினைத்த திமுக தலைமை உடனடியாக மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமானுக்கு பதில் சொல்ல அனுப்பியது ஆனால் அதுவும் ஊடகங்களில் எடுப்படவில்லை இந்நிலையில் தான் உதயநிதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதில் ஒன்றை நீண்ட பதிவாக போட்டு இருக்கிறார் அதில் 


யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல -  சிலரிடம் கலைஞரைப் போல – சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால்,  "நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ" என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்" என்று கூறினேன்.என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக்கொண்டேன்.

ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாரமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும்  ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களேஎன கூறி இருந்தார். அட என்னடா உதயநிதி மீண்டும் எவன் அப்பன் வீட்டு பணத்தையும் கேட்கவில்லை என மத்திய அமைச்சருக்கு பதிலடி கொடுப்பார் என பார்த்தால் இப்படி மரியாதை தர தயாராக இருக்கிறோம் என ஒரே வார்த்தையில் பல்டி அடித்து விட்டாரே என சமூக வலைத்தளங்களில் உடன் பிறப்புகள் கதறி வருகிறார்கள். எங்க உதயநிதிக்கு தைரியம் இருந்தால் முதல் நாள் சொன்னது போன்று அதே ஒருமையில் மத்திய அமைச்சரை பேச சொல்லுங்கள் பார்ப்போம் என பாஜகவினர் எதிர் கேள்வி எழுப்பி வருவது திமுக உடன்பிறப்புகளை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது.