உதயநிதி சனாதானம் குறித்து பேசிய கருத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்து வந்த திமுக மூத்த தலைவர்கள் கூட தற்போது வாய் மூடி அமைதியாகி விட்டார்கள் அதற்கு இரண்டு முக்கிய காரணம் அறிவாலயம் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.ஒன்று கனிமொழியை தொடர்புகொண்டு ராகுல் காந்தி பேசிய போன் கால் மற்றொன்று அமைச்சர் உதயநிதியை மம்தா பேனர்ஜி ஜூனியர் என்று கூறியது இந்த இரண்டு விஷயங்கள் தான் தற்போது திமுக வட்டாரத்தில் முக்கிய பேசு பொருளாக மாறி இருக்கிறது.ராகுல் காந்தி திமுக எம்பி கனிமொழியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். வட இந்தியாவில் உதயநிதி பேசியதை வைத்து பாஜக செய்துவரும் பிரச்சாரத்தை பற்றி கனிமொழியிடம் விளக்கமாக தெரிவித்த ராகுல் காந்தி… ‘புதிய ஐ என் டி ஐ கூட்டணியை கட்டியெழுப்பியதோடு, வெற்றி பெற வைக்க திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், அரும்பாடுபட்டு வருகிறார்.
இந்த நேரத்தில் உதயநிதியின் இந்த பேச்சு அவரது கருத்துரிமை என்றாலும், அரசியல் ரீதியாக இந்தியா கூட்டணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இது பற்றி ஸ்டாலின் ஜியிடம் தெரிவிக்க வேண்டுகிறேன்’ என சொல்லியிருக்கிறார் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் கனிமொழியும் விவரங்களை பகிர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது.எப்போதும் முதல்வர் ஸ்டாலினுடன் நேரடியாக பேசும் ராகுல் காந்தி, முதல்வரின் மகன் பேசியது குறித்து அவரிடமே வருத்தம் தெரிவித்தால் சரியாக இருக்காது என கருதி கனிமொழியிடம் பேசியதாக கூறப்படுகிறது.இது ஒருபுறம் என்றால் மம்தா பேனர்ஜி கொடுத்த பேட்டியில் சொல்லிய தகவல்களும் திமுகவை சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது.செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு. இந்தியா என்பது ‘வேற்றுமையில் ஒற்றுமை.ஒரு பிரிவினரை புண்படுத்தும் எந்த விஷயத்திலும் நாம் ஈடுபடக்கூடாது. நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன். சனாதன தர்மம் ரிக் வேதம், அதர்வ வேதங்களிலிருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம்.எனது அரசால் பல அர்ச்சகர்கள் ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்கள் சமய சடங்குகளை மேற்கொள்கின்றனர்.
எந்த பிரிவினரையும் புண்படுத்தும்படி கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்பது அனைவருக்கும் எனது பணிவான வேண்டுகோள்” என்று தெரிவித்துள்ளார் அத்துடன் உதயநிதி ஜூனியர் அவரது பேச்சை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம் எனவும் போகிற போக்கில் உதயநிதியை விவரம் இல்லாத பையன் என மம்தா சொல்லிவிட்டார் என்ற விமர்சனமும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.நாடு முழுவதும் நாங்கள் புதிய கூட்டணியை ஏற்படுத்திவிட்டோம் மோடியை வீழ்த்தியே தீர்வோம் என முதல்வர் ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பேசி கொண்டு இருக்க தற்போது அந்த கூட்டணி கட்சி தலைவர்களே உதயநிதிக்கு மெல்ல மெல்ல எதிர்ப்பை பதிவு செய்து வருவது ஸ்டாலின் இந்திய கனவை சுக்கு நூறாக உடைத்து இருக்கிறது.அடுத்த வீடியோவில் உதயநிதிக்கு எதிராக 200 மேற்பட்ட பிரபலங்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எழுதிய கடிதத்தின் மீதான நடவடிக்கை எடுத்தால் உதயநிதி பதவி தப்புமா? என்ன செய்ய போகிறது திமுக என விரிவாக பார்க்கலாம் மறக்காமல் நமது tnnews24 பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.