24 special

டெல்லிக்கு பறந்த கடிதம் ....! உதயநிதி கதை முடிந்தது...!

udhayanithi, highcourt
udhayanithi, highcourt

உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 262 பிரபலங்கள் நேற்று கடிதம் எழுதிய நிலையில் தற்போது அதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.டெல்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி டிங்கரா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோபால் கிருஷ்ணா மற்றும் நாடு முழுவதும் உள்ள மூத்த எழுத்தாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், சினிமா கலைஞர்கள், பாடகர்கள் என்று 262 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதி இருந்தனர்.அதில், ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கடந்த 2022ல் ஜாகிர் அப்துல்லா வசந்த் யூனியன் ஆப் இந்தியா என்ற வழக்கில் ஒருவர் சமுதாயத்தில் பதற்றத்தையும், பிரிவினையும் ஏற்படுத்தும் வகையில் பேசி இருக்கிறார் என்றால் சம்பந்தப்பட்ட அரசு புகார் வரவேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருக்காமல் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யலாம்.


காவல்துறைக்கும் அதற்கான அதிகாரம் இருக்கிறது என்றும் தீர்ப்பளித்திருக்கிறது.இந்த தீர்ப்பின் அடிப்படையில் உடனடியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.மேலும், தமிழ்நாடு அரசும், தமிழக காவல்துறையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்ற வழக்கில் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். எனவே அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது .மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அந்த கடிதத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. நாட்டின் மிகப் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அமைந்திருக்கிறது என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தார்கள்.

இந்நிலையில் பிரபலங்கள் எழுதிய கடிதம் உச்ச நீதிமன்ற நீதிபதியின் கவனத்திற்கு சென்று இருப்பதாகவும் இது குறித்து விளக்கம் அளிக்க தமிழக காவல்துறை மற்றும் தலைமை செயலாளருக்கு விரைவில் நோட்டிஸ் அனுப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.ஏற்கனவே ராகுல் காந்தி எம் பி பதவி பறிக்க இது போன்ற ஆரம்பகட்ட நிகழ்வுகளே காரணமாக அமைந்த நிலையில் இறுதியில் ராகுல் பதவி பறி போனது, உச்ச நீதிமன்றமும் ராகுல் காந்தி குற்றம் அற்றவர் என விடுதலை செய்யாமல் இனியும் இடை தேர்தல் வந்தால் பெரும் பணம் செலவாகும் எனவே ராகுல் காந்தியின் எம் பி பதவியை பறித்ததை நிறுத்தி வைக்கிறோம் என தீர்ப்பில் கூறியது.அப்போதே வழக்கு தொடுத்த நபர்கள் உச்ச நீதிமன்றத்தின் இந்த செயல் தவறான முன்னுதாரணமாக மாறும் நாளை வேறு யாராவது வேறு சமூகம் அல்லது வேறு மதம் குறித்து விமர்சனம் செய்வார்கள் நீதிமன்றம் சட்டங்கள் மீது பயம் இருக்காது தண்டனை உண்டு என இருந்தால் மட்டுமே அடங்குவார்கள் என தெரிவித்து வந்தனர்.

அதை மெய்பிக்கும் வகையில் அப்படியே சனாதனம் குறித்து பேசி இருக்கிறார் உதயநிதி, இப்போது ராகுல் காந்தியை மன்னித்து உச்ச நீதிமன்றம் விட்டது போல் உதயநிதியையும் மன்னித்து விட்டால் நாளை சமூகத்தில் பெரும் பதற்றம் உண்டாகும் என பல நீதி துறையை சேர்ந்தவர்களே கருத்து தெரிவிக்கும் சூழலில் உதயநிதி மீது கடும் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு நீதிதுறை சென்று இருக்கிறதாம்.இதனால் எப்படி இந்த விஷயத்தை கையாள்வது என டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை மேற்கொண்டு வருகிறதாம் திமுக தலைமை.